அவள் ஒரு புதுக்கவிதை

அவள் ஒரு புதுக்கவிதை


எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை! அவள்

இருவிழி அசைவே

தேன் கவிதை.!


இளமைக்கு இலக்கணம் கிடையாது..! அவள்

எழுதுவது தான் இங்கு 

புதுக்கவிதை.!


பருவத்தை மேலாடை மறைத்து நிற்க..

புருவத்தில் மைகொண்டு எழுதுகிறாள்..


மாங்கனி அங்கே மறைந்திருக்க.. மாமரக் கிளையினை பார்த்திருந்தாள்..


தேன்கனி இதழினில் கலந்திருக்க.. அவள்

வான்வெளி நிலவென

பாட்டிசைத்தாள்!


கட்டிலில் சாய்ந்தது

கோபுரங்கள்.. அவள் கை பட எழுந்தது காவியங்கள்..


பசியில்லை! இரவினில்

தூக்கமில்லை ! அவள் பருவத்தின் பாடலை

எழுதுகின்றாள்..!


கலவில்லை உறவில்லை

காதலனை.. அவள் பிரிந்ததை

நினைத்தே எழுதுகிறாள்!


இரவுக்கு பகலுக்கும் இனியென்ன வேலை?

கவிதையே.. கவிதையை எழுதுகிறாள்.!


*வே.கல்யாண்குமார்.*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%