கருத்த வானம் தந்த
பெருத்த கொடை
இடியும் மின்னலும்
இணை சேர்ந்து
பரந்த வானில் இசையாகும்
துளி மழையாய்த் தொடங்கி
தூய நீராய்
பூமி பார்க்கும்
வறியவர்க்குக் கொடுக்கும் வள்ளலென
வாரிக் கொடுக்கும் பலநேரம்
சிறியோராய் மாறிச்
சிக்கல் கொடுக்கும்
சில நேரம்
பச்சைப் புல்வெளியின்
பாசமிகு தோழன்
வானிலை அறிக்கையும்
நிலை மாறும்
தன்னிலை மறந்து தடுமாறும்
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு
விடுமுறை தந்து மகிழ்விக்கும்
இயல்பு வாழ்க்கை பாதித்து
இன்னல் தந்து துயரளிக்கும்
ஏழை மக்கள் வீடு தேடி
கோழை போல
தொல்லை தரும்
மேட்டுக்குடியைக் காத்திட்டு
மேவிய பெருமை தேடி வரும்
குடியில் சமநிலை காட்டாத
கனமழை என்றும் சாபமே!

தமிழ்நிலா
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?