ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் பாராட்டு விழா..

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் பாராட்டு விழா..

*கற்றல் அடைவு 100 நாள் சவால் சிறப்பிடம் பெற்ற பள்ளிக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் பாராட்டு விழா...!*


வந்தவாசி, ஜூலை 08:


பள்ளி கல்வித்துறை சார்பில் திருச்சியில் நடைபெற்ற கற்றல் அடைவுக்கான 100 நாள் சவாலில் பங்கேற்று கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற வந்தவாசி கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் பாராட்டு விழா மற்றும் மாணவர்களுக்கு கற்றல் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அ.ஷமீம் பேகம் தலைமை தாங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் முன்னிலை வகித்தார். ஆசிரியை சி.கங்கா வரவேற்றார்.


சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் ஆர்.செந்தமிழ் பங்கேற்று, மாணவர்கள் அடிப்படை கற்றல் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் தமிழக அளவில் சிறப்பிடம் பெற்ற இப்பள்ளிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கற்றல் பொருட்கள் வழங்கப்பட்டது. இறுதியில் ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் அ.ஷாகுல் அமீது நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%