
பாலுவுக்கு ரொம்ப நாட்களாக பேங்கில் கணக்கு துவங்க வேண்டும் என்று ஆசை, அதிலும் ஸ்டேட் பேங்கில் துவங்க வேண்டும் என்பதில் ரொம்பவும் ஆர்வமாக இருந்தான். பாலு படித்ததெல்லாம் எட்டாவது வரைதான். வேலை பார்ப்பது ஒரு தனியார் கம்பெனியில் அதுவும் நிரந்தரமாக இல்லை. லீவ் போஸ்டில் ஆள் இல்லாத போது வேலை செய்வான். அப்படி இப்படி என்று கையில் ஆயிரம் ரூபாய் சேர்ந்தவுடன் வங்கிக்கு செல்ல முடிவெடுத்தான்.
முடிவெடுத்தவுடன் அவன் செல்ல விரும்பிப் பேங்க் அவன் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே இருந்த பேங்க்தான். முதன் முதலாக பேங்கிற்கு செல்கிறோம், நல்லா டீக்கா போவோம் என்று முடிவெடுத்து சலவை செய்த பேண்ட் சர்ட்டை எடுத்து மாட்டிக்கொண்டான். கண்ணாடியை பார்த்து ஒரு முறை தலையை வாரிக் கொண்டான். பின் பவுடர் பூசிக்கொண்டான். கொஞ்சம் பந்தாவாக இருக்கட்டுமே என்று தன் தங்கை குழந்தையின் விளையாட்டுப் பொருளான பொம்மை செல்போனை மறக்காமல் சட்டைப் பையில் வெளியே தெரியுமாறு வைத்துக் கொண்டான்.
பேங்கில் நுழைவாயிலில் துப்பாக்கியுடன் நின்றிருந்த காவலரை பார்த்தவுடன் தன் பணம் நிச்சயமாக இந்த பேங்கில் பத்திரமாக இருக்கும் என பாலுவுக்கு நம்பிக்கை வந்தது. உள்ளே நுழைந்தவுடன் தஸ் புஸ் என்று இங்கிலீஸ் பேசிக்கொண்டிருந்த பெண்ணை பார்த்தவுடன் எட்டாவது படிக்கும் போது பாடம் நடத்திய இங்கிலீஷ் டீச்சர் பாரதி நினைப்பு வந்தது. இவனை பார்த்தவுடன் வாட் என்றாள். உடனே பாலு அக்கௌன்ட் ஓப்பன் என்ற ஆரம்பிக்க, அவர் யூ கோ அண்ட மீட் அவர் அக்கௌண்டென்ட் வித் ஐடின்டி புருப் என கூற அப்படியே வெளியே வந்துவிட்டான்.
நடந்ததை தன் நண்பனிடம் கூற அவன் டேய் நான் சொல்வது போல் நீ நாளைக்கு பேங்க்குக்கு என்னுடம் வா எனக் கூறி கூட்டிச்சென்று மேடம் புதுசா கணக்கு துவங்கனும் என சொல்ல, புது கணக்கா அதோ அங்கு முதலில் இருக்கும் மேடத்திடம் சென்று தங்களின் வசிக்கும் இடம் மற்றும் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையையும் காண்பித்து ஆரம்பிக்கலாம் எனக் கூறி அரை மணியில் புத்தகமும் கொடுக்க பிரமித்துப்போன பாலுவிடம் ஏண்டா உனக்கு இங்கிலீஷ் நாக்குல பிளேடு போட்டு ஷேவ் பண்ணினாலும் வராது அப்புறம் ஏன் வீண் பந்தா அதான் சாதரணமாக வரச்சொன்னேன், இப்ப பார் வேலைமுடிந்து விட்டது எனக்கூற யதார்த்த நிலை உணர்ந்தான்.
லால்குடி வெ நாராயணன்*
SBIOA UNITY ENCLAVE MAMBAKKAM CHENNAI 600127
044 7968 0231
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?