பூவின் வாசனை பரவும்
பரவிய வாசனை
தேனீக்களை இழுக்கும் !!
மரத்தின் உச்சியில்
மறைத்தேக் கட்டும் கூட்டினை
கட்டிய கூட்டில் தேனீக்கள்
கக்கியேச் சேர்க்கும் தேனை
கட்டிய கூடும் கனியும்
கனிந்தே கூடும் பெருக்கும் !!
பெருத்த கூட்டின் தேனைத்
திருடிட வல்லவர் வருவர்
தீயிட்டுத் தேனீக்களை
விரட்டியே அடிப்பர் !!
தேனடை கைமாறும்
தேனையும் இழக்கும்
தேனீக்களும் மடியும் தீயால் !!
தேனீக்கள் போலேத்
தேடியே சேர்ப்பர் பணத்தை
தேடிடும் பணத்தைக்
கவர்ந்திடக் கள்வரும் வருவர் !!
தேனீக்குத் திருடும் மனிதர்கள்
தேடிய பணத்துக்கும் திருடர்கள் !!
தேடிய பணத்தைச் சேர்க்காமல்
தேவைக்குச் செலவிட்டால் அது உங்களுக்கு !!
தேடிச்சேர்த்தப் பணத்தைத்
தனக்கும் வறியோர்க்கும்
தேர்ந்தே செலவிடு என்றார்
திருமூலர் திருமந்திரத்தில் !!
சண்முக சுப்பிரமணியன்
திருநெல்வேலி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?