பரத நாட்டியத்தில் ஃபியூச்சர் கலாம் புக் ஆப் ரெகார்ட் மற்றும் யூனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட் செய்து சாதனை

பரத நாட்டியத்தில் ஃபியூச்சர் கலாம் புக் ஆப் ரெகார்ட் மற்றும் யூனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட் செய்து சாதனை

ஜூலை.07

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி லலிதம் நாட்டியாலயா மாணவிகள் பரத நாட்டியத்தில் ஃபியூச்சர் கலாம் புக் ஆப் ரெகார்ட் மற்றும் யூனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட் செய்து சாதனை.கந்தர்வகோட்டை வித்யா விகாஸ் கல்வி நிறுவன வளாக விளையாட்டு திடலில் கீரமங்கலம் ஸ்ரீ ஒப்பிலாமணி அம்பாள் உடனுறை ஸ்ரீ மெய்நின்ற நாதர் சுவாமி சுவாமி வரலாற்று புத்தக வெளியீட்டு விழாவை முன்னிட்டு ஏடிஎஸ் தொண்டு நிறுவனம் சார்பில் 2500 மாணாக்கர்களை கொண்டு நடத்திய பரத நாட்டிய சாதனை நிகழ்சியில் பொன்னமராவதி காமராஜ் நகர் லலிதம் நாட்டியாலயா நடன ஆசிரியர் பரத வளர் கலைமணி மா.லலிதா குமாரி தலைமையிலான 30-க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு தமிழகத்தில் மிகவும் தொன்மை வாய்ந்த நடனம், வெளிநாட்டினரை கவர்ந்திழுக்கும் நடனம் என்றால் அது பரத நாட்டியம் தான் என்றும்.பரத நாட்டியத்தை தெய்வீக கலை என்றும் பரத நாட்டியத்தை உலகமறிய செய்யும் வண்ணம் கீதாஞ்சலியுடன் தொடங்கிய பரத நாட்டியத்தில் மாணவிகள் பரதநாட்டியம் நடனமாடி லலிதம் நாட்டியாலயா மாணவிகள் ஃபியூச்சர் கலாம் புக் ஆப் ரெகார்ட், யூனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட் என இரட்டை சாதனை படைத்து விருதுகளை பெற்றுள்ளனர்.மேலும் லலிதம் லலிதம் நாட்டியாலயா நடன ஆசிரியர் பரத வளர் கலைமணி குரு மா.லலிதா குமாரி அவர்களுக்கு "சிறந்த நாட்டிய பள்ளிக்கான விருது" வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%