இதழ் குவித்து பதில் இல்லை
இமை பிரித்து அதைச் சொல்வாய்
மொழி சொல்லாத பல சேதிகளை
விழி விரித்துச் சொல்லி முடிப்பாய்!
பல நாட்கள் பாராத ஏக்கத்தை
தலை கோதி தணித்துச் செல்வாய்
விரல் கோர்த்து மடி சாய்ந்து
விரகத் தீயில் எனை நனைப்பாய்!
பேசாத உந்தன் அழகு மௌனங்கள் இனிப்பில் நனைத்த கவிதைத் தருணங்கள்!'
அழகான மௌனத்திற்கு பழகிய என்னை ஏனோ இன்று
அழவைத்துப் பார்த்து அழகு பார்க்கிறாய்!
அழைப்புகளை ஏற்காத உன் மௌனச் செவிகள்
குறுஞ் செய்திகளை பிரிக்காத உன் விரல்களின் வலிந்த மௌனம்
பாராதது போல் நகரும் உன் பாதங்களின் மிதிப்பில் நசுங்கி அழும் என் மௌனச் சத்தம்!
இதழ்களையும் இமைகளையும் மட்டும் இறுக்க மூடினாயே, அடி செல்லமே! உன் இதயத்தின் ஓசைகளில் என் பேரை உச்சரித்து, உச்சரித்து... உன் வெற்று மௌனம் தோற்றுப் போகுதே!
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?