
ஜனகமக ராசன் அரசாளும் மிதிலையில்
பூமியில் மழலையாய் கிடந்த தாயே.. தந்தை யார் என்பதும்.. தாயின் மடி எதுவென்றும் அறியாத பூத்தாய் பெத்த மகளே..! பிறப்பிலே வேதனை.. பின்னாளில் சோதனை.. காடெல்லாம் நடந்த தாயே.. கணவனைப் பிரிந்தே தான் அசோக வனத்திலே.. கண்ணீரை சிந்தினாயே..
அந்தமான் வேணுமென.. அறியாமல் கேட்டதால்.. அந்தமான் வரையில் போனாள்.. அரக்கன் சிறையெடுக்கவே.. தடுத்திட்ட இலட்சுமணன் கோட்டையும் தாண்டிப் போனாய்.... ஜடாயு வெட்டுண்டு வீழ்கையில் செய்வதறியாது.. சீதையே கலங்கிப் போனாய்.!
வில்லாதி வில்லனின் மனைவியே சீதையே.. கற்பில் நீ தெய்வமானாய்.. அஞ்சனை மைந்தனாம் ஆஞ்சிநேயனுக்கு சூடாமணி தந்து நீ அருளுடை தாயுமானாய்!
அரக்கனின் நெஞ்சிலே அனலென எரிந்து நீ.. ஆயிமகமாயி ஆனாய்!
ஆருயிர் இராமனின் போர்திறன் உலகறிய.. பூமியில் வீரமானாய்.!
கற்புடைத் தெய்வமே.. இலக்குமியின் வடிவமே மண்ணில் நீ பெண்மையானாய்! பெண்ணாக பிறந்ததால் கண்ணீரின் நடுவிலும் கனலிலும் நடந்து போனாய்! தீ கூட சுடவில்லை சந்தேக மனிதனாய் அவதாரம் மாறும் வேளை.. நொந்து நீ விடுத்திட்ட மூச்சிலே அண்டத்தில் எரிமலை வடிவமானாய்!
பட்டத்து ராணி நீ.. மரவுரி தரித்துமே நடக்கயிலும் கலங்கவில்லை! கணவனைப் பிரிந்து ஓர் தீவிலே சிறைப்பட்டு இருக்கயிலும் கலங்வில்லை!
கட்டியவன் தீயிலே இறங்கென்று சொன்னதில் வெந்து போனாய்.! ஒரு முறை அல்லவே மறுமுறை கானகம் மனம் நொந்து சென்றனை சீதை தாயே!
அரக்கரை அழித்திடும் அவதார நோக்கத்தில் உன்பங்கு உண்டு தாயே! அதற்காக நீ பட்ட வேதனை.. அவமானம் எப்படி சொல்வேன் தாயே? இருமக்கள் பெற்றனை.. இராகவனை மணந்தனை.. ஆனாலும் உன்வாழ்வு சோதனை! அவதார நோக்கங்கள் நிறைவுற்ற போதிலும் மனக்குறை தீரவில்லை! அதனாலே அன்னையே மண்ணையே பிளந்து நீ மண்ணுக்குள் மறைந்து போனாய்! பெண்ணுக்குத் திலகமே.. சீதாப்பிராட்டியே.. மண்ணுக்குள் தோன்றி நீ.. மண்ணுக்குள் மறைந்தாலும்.. எங்கள் மனதுக்குள் தெய்வமானாய்.!
ஸ்ரீ சீதா புகழ் வாழ்க!
வே.கல்யாண்குமார்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?