“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு மருத்துவ அடையாள அட்டை: அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு மருத்துவ அடையாள அட்டை: அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

மேல்விஷாரம், ஆக.10–


கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று (9–ந் தேதி) ராணிப்பேட்டை மேல்விஷாரம் நகராட்சி, இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிசிச்சைகளை பார்வையிட்டு பொதுமக்களிடம் நலம் விசாரித்தார்.


தொடர்ந்து, 5 பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட அட்டைகள், 2 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் 2 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டைகள், 2 பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் மருந்து பெட்டகங்கள், 4 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள் வழங்கினார்.


இதனை தொடர்ந்து மருத்துவ முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள துறைச் சார்ந்த விழிப்புணர்வு கண்காட்சி அரங்கங்களை பார்வையிட்டார்.


கண் சிகிச்சை பிரிவு


தொடர்ந்து, பொது பிரிவு பரிசோதனை, மருத்துவ பரிசோதனை மையம் ஆண்கள், பெண்கள் ஸ்கேன் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள மையம் காது, மூக்கு, தொண்டை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, இருதய சிகிச்சை பிரிவு, நரம்பியல் சிகிச்சை பிரிவு, பல் மருத்துவ பிரிவு, சுவாச மண்டல பிரிவு ஆகியவைகளையும் பார்வையிட்டார். மேலும் ஆயுர்வேதம் சித்தா பிரிவுகளையும் பார்வையிட்டார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம், மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், நகரமன்ற தலைவர் குல்ஜார் அஹமது, நகரமன்ற உறுப்பினர் ஜாபர் அகமது, நகராட்சி ஆணையாளர் பழனி, வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%