விதி விதி என்று

விதி விதி என்று


அறுசீர் மண்டிலம்.


விதிமேல் பழியைப்

போடாதே

விழியை வழிமேல்

வைத்திடுவாய்

மதியைக் கொண்டு

முன்னேறு

மாண்பாய் நீயும்

தொண்டுசெய்வாய்!

இதயம் ஏற்க

நன்மைசெய்வாய்

இனிமை தம்மைக்

கொண்டுசெய்வாய்

உதயம் முதலே

உழைத்திடுவாய்

ஊருக் காக

உழைப்பாயே!


வீரம் மானம்

உயிரன்றோ

வெற்றி தோல்வி

சமமன்றோ

தீரம் சூரம்

நல்லதன்றோ

தெளிவு துணிவு

வல்லதன்றோ!

ஈர நெஞ்சைக்

கொண்டிடுவாய்

இனிமை யாவும்

கண்டிடுவாய்

ஓர வஞ்சம்

இல்லாமல்

ஒண்மை யாக

வாழ்ந்திடுவாய்!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%