கிராமப்புற மாணவர்களுக்கு ஏஐ தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

கிராமப்புற மாணவர்களுக்கு ஏஐ தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

சென்னை:

செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பம் குறித்து கிராமப்​புற மாணவர்​களுக்கு கலந்​துரை​யாடல் மூலம் விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்​படும் என்று உயர்​கல்வி துறை அமைச்​சர் கோவி.செழியன் தெரி​வித்​தார். தமிழ்​நாடு மாநில உயர்​கல்வி மன்​றம் சார்​பில் ‘செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) ஏற்​படுத்​தும் தாக்​கம்’ என்ற தலைப்​பிலான கருத்​தரங்​கம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. உயர்​கல்வி துறை அமைச்​சர் கோவி.செழியன் தொடங்கி வைத்து பேசி​னார்.


உயர்​ கல்வி துறை செயலர் பொ.சங்​கர் சிறப்​புரை நிகழ்த்​தி​னார். முன்​ன​தாக, உயர்​கல்வி மன்ற துணை தலை​வர் எம்​.பி.​விஜயகுமார் வரவேற்று அறி​முக​வுரை ஆற்​றி​னார். மன்​றத்​தின் உறுப்​பினர் செயலர் டி.வேல்​முரு​கன் நன்றி கூறி​னார். விழா​வில், கல்​லூரி கல்வி ஆணை​யர் ஏ.சுந்​தர​வல்​லி, தொழில்​நுட்ப கல்வி ஆணை​யர் இன்​னசென்ட் திவ்யா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.


விழா முடிந்த பிறகு, செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் கோவி.செழியன் கூறிய​தாவது: தற்​போது அரசு கல்​லூரி​களி​லும் ஏஐ மற்​றும் அதுதொடர்​பாக புதிய பட்​டப் படிப்​பு​கள் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளன. உயர்​கல்​வியை அடுத்த நிலைக்கு கொண்​டு​செல்ல பல புதிய திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. கிராமப்​ புற மாணவர்​களும் தெரிந்​து​கொள்​ளும் வகை​யில், அனைத்து துறைகளி​லும் ஏஐ தொழில்​நுட்​பம் தொடர்​பான கலந்​துரை​யாடல், நிகழ்ச்​சிகள் நடத்​தப்பட உள்​ளன. இவ்​வாறு அவர் கூறி​னார்.


கருத்​தரங்​கில், கல்வி - வேலை​ வாய்ப்​பில் ஏஐ தொழில்​நுட்​பத்​தின் தாக்​கம் குறித்து கல்​வி​யாளர்​கள், நிபுணர்​கள், மாணவர்​கள், பேராசிரியர்​கள், தொழில் நிறு​வனங்​களின் நிர்​வாகி​கள் கலந்​துரை​யாடினர்.


எதிர்​காலத்​தில் கல்​வி, வேலை​வாய்ப்​பு​களில் ஏஐ எந்த வகை​யான மாற்​றங்​களை ஏற்​படுத்​தும், அதை எதிர்​கொள்ள மாநில உயர்​கல்வி அமைப்​பு​களில் எத்​தகைய கட்​டமைப்​பு​களை உரு​வாக்க வேண்​டும் என்​பது குறித்து அவர்​கள் ஆலோ​சனை நடத்​தினர்.


வேக​மாக வளர்ந்து வரும் ஏஐ உள்​ளிட்ட தொழில்​நுட்​பங்​கள் மற்​றும் எதிர்​கால தேவைக்கு ஏற்ப தமிழக உயர்​கல்வி நிறு​வனங்களில் உரிய மாற்​றங்​கள் செய்​வது தொடர்​பான ஆலோ​சனை​கள், கருத்​தரங்க முடி​வில் தமிழக அரசுக்கு பரிந்​துரை​யாக சமர்ப்​பிக்​கப்​படும் என்று மாநில உயர்​கல்விமன்ற அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%