அரசு பாலிடெக்னிக் கல்லூரி, செய்யாறு 210 மாணவர்களுக்கு 'லேப் டாப்'களை ஜோதி எம்.எல்.ஏ., வழங்கினார்
Jan 06 2026
17
செய்யாறு, ஜன. 7 -
செய்யாறில் உள்ள அரசு பாலிடெக்னிக் இறுதி ஆண்டு பயின்று வரும் 210 மாணவ, மாணவிகளுக்கு செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி 'லேப் டாப்'களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு செய்யாறு சப் - கலெக்டர் அம்பிகா ஜெயின், கல்லூரி முதல்வர் முனைவர் சு.தனலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர். பற்றாளர் அ.ரவிச்சந்திரன், உடற்கல்வி இயக்குனர் முனைவர் ச. சரவண காந்தி, அமைப்பியல் துறை தலைவர் த.கலைமணி, மின்னியியல் துறை தலைவர் முனைவர் மா.சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்யார் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 210 மாணவ, மாணவிகளுக்கு 'லேப் டாப்' வழங்கி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி உதவி இயக்குனர் வேல்முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன், தேர்தல் பொறுப்பாளர் அரசு, நகர செயலாளர் விஸ்வநாதன், சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் கலைஞர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர் ஞானவேல், கபடி ஞானமுருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?