*உலக அமைதி வார விழா*..

*உலக அமைதி வார விழா*..


*ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் செங்கரைப்பாளையம் அறிவுத்திருக்கோவிலில் 07.01.2026 புதன்கிழமை காலை 11.00 மணி முதல் பகல் 2.00 மணி வரை, "உலக அமைதி வார விழா" ஏழாம் நாள் நிறைவு விழா நடைபெற்றது*

*இறைவணக்கம், குரு வணக்கம், துரிய தவம், உலக நல வேள்வி பேராசிரியர் கே.பூமலர் அவர்கள் இயற்றினார்.*

*விழாவில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் திரு வி.பொன்னுசாமி அவர்கள் தலைமை தாங்கி, அறிமுக உரை ஆற்றினார்.*

*விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் அறக்கட்டளை செயலாளர் திரு எஸ்.கிருஷ்ணன் அவர்கள் வரவேற்றார்.*

*"உலக அமைதி வார விழா" ஏழாம் நாள் சொற்பொழிவாக சிறப்பு பட்டி மன்றம் நடைபெற்றது.* 

*தலைப்பு:*

*குடும்பத்தின் வெற்றி... கணவரிடமா? மனைவியிடமா?*


*நடுவர் பேராசிரியர் மு.துரைசாமி அவர்கள்*


*கணவரிடமே....!*

*அருள்நிதி N.தரண்யா அவர்கள்*

*பேராசிரியர் S.ஜேம்ஸ் அற்புதம் அவர்கள்*


*மனைவியிடமே...!*

*பேராசிரியர் விஜயலட்சுமி முருகேசன் அவர்கள்*

*பேராசிரியர் R. பாலமுருகன் அவர்கள்*


*பட்டிமன்ற முடிவில், ஒரு வண்டிக்கு பயணம் செய்ய இரண்டு சக்கரங்கள் எப்படி முக்கியமோ அப்படித்தான்,*

*குடும்ப வெற்றிக்கு கணவன், மனைவி ஆகிய இருவருமே காரணம் என நடுவர் மு.துரைசாமி அவர்கள் தீர்ப்பு அளித்தார்.*

*பட்டிமன்றப் பேராசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.*

*விழாவில் மனவளக்கலை ஆசிரியப் பெருமக்கள்,* *இங்கு பயிற்சி பெற்ற 50-க்கும் மேற்பட்ட மனவளக்கலை பயிற்சி பெற்ற பெண் அன்பர்கள், எம்.மணி, எஸ்.எம்.மணி, ஆர்.தர்மலிங்கம், எம்.பாலசுப்பிரமணியன், டி.ஈஸ்வரன், வி.சி.குப்புசாமி, ஏ.நடராஜன், சி.தங்கராஜ், ஆர்.கதிர்வேல், பேட்டை முத்துசாமி, ஜோதீஸ்வரமூர்த்தி உட்பட ஏராளமான மனவளக்கலை அன்பர்கள்,மற்றும் சி.கதிர்வேல், ஜி.செல்வராஜ் முதலிய அறங்காவலர்கள், எஸ்.பி.சுந்தரம், சி.தட்சிணாமூர்த்தி முதலிய அறக்கட்டளை உறுப்பினர்கள், இன்னும் கஸ்பாபேட்டை, செல்லப்பம்பாளையம், செங்கரைப்பாளையம் , சிவலிங்கபுரம், வேலாங்காட்டுவலசு, குளூர், ஆ.கொ.பாளையம், கோ.நா.பாளையம் போன்ற ஊர்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கு மேற்பட்ட இருபால் அன்பர்கள் அரங்கம் நிறைந்து மகிழ்வுடனும், திரளாககவும் கலந்து கொண்டனர்*

*1.1.26 முதல் ஏழு நாட்களும் நமது விழா படங்கள், செய்திகளை வெளியிட்ட "தமிழ்நாடு ஈ-பேப்பர்" நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.*

*அறக்கட்டளை பொருளாளர் சி.மனோகரன் நன்றியுரை வழங்கினார்*

*உலக நல வாழ்த்துப் பாடலுக்கு பின்னர் விழா இனிதே நிறைவுற்றது.*

*நன்றி! வணக்கம்!*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%