~~~~~~~~~~~~~~~~~~
கனவிலே.. கனவிலே..
காந்தி வந்தாயே...
காதிலே.. அழுதபடி
ஏதோ சொன்னாயே.!
மனதிலே.. மனதிலே..
காந்தி வந்தாயே..
மறுபடியும்..மறுபடியும்
ஏதோ சொன்னாயே.!
அமைதியை.. அமைதியை..
தேடு என்றாயே.!
தமதுயிர் தந்தும் நீ..
தவித்து நின்றாயே.!
மதுவினை..மதுவினை
ஒழிக்க இயலாது..
மனதிலே கவலையில்
சிலையும் ஆனாயே..!
பொய்யிலே பணத்திலே
மதியினை இழந்தே..
மெய்யினை தேடியே..
மீண்டும் வந்தாயே.!
கற்பனை.. கற்பனை..
காந்தியின் கனவோ..
கற்சிலை யானது..
காந்தியின் கனவோ?
நேரவழி நடப்பவர்..
யாரும் இல்லையே..
சத்திய சோதனை
முடிய வில்லையோ..?
கைத்தறி.. கதருடை..
இராட்டையும் இன்றி
கைத்தடி ஊன்றியே..
காந்தி வந்தாயே.!
போர்களின் நடுவிலே
யாழ் இசை எங்கே.?
புதியதோர் உலகிலே
காந்தியம் எங்கே.?
தேடியே..தேடியே..
தேம்பி அழுதாயே..
தேவனே.! காந்தியே..
ஏதோ சொன்னாயே.!
வே.கல்யாண்குமார்.*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?