ராஞ்சி,
4 அணிகள் பங்கேற்றுள்ள பெண்களுக்கான 2-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 3-வது லீக்கில் ராஞ்சி ராயல்ஸ் அணி, ஷிராச்சி பெங்கால் டைகர்சை எதிர்கொண்டது.
தொடக்கம் முதலே முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ராஞ்சி அணி 5-0 என்ற கோல் கணக்கில் பெங்கால் டைகர்ஸ் அணியை பந்தாடியது. ராஞ்சி அணியில் ஹன்னா காட்டர் (10-வது நிமிடம்), பியூட்டி டங்டங் (14-வது நிமிடம்), வான் டெர் ஹேடே (33 மற்றும் 57-வது நிமிடம்), சங்கிதா குமாரி (44-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.
2-வது ஆட்டத்தில் ஆடிய ராஞ்சி அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். இன்றைய ஆட்டத்தில் எஸ்.ஜி. பைப்பர்ஸ்- சூர்மா ஆக்கி கிளப் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?