அடையாளம் கேள்வியாகி நிற்கும் அவர்கள் வாழ்க்கை.
பொதுவெளியில் பொதுமக்கள்
பார்வைகளில் குத்திக்கொல்லும் தினசரி நிகழ்வுகள்.
பிறந்த உடல் தந்த வலி அல்ல.
சமூகம் கொடுத்த மறுப்பு தான் பெரும் சுமை.
அம்மாவின் மடியில் கூட இடமில்லா இரவு.
அப்பாவின் மௌனமே கூர்மையான ஆயுதம்.
கனவுகள் மனித சமுதாயத்தில் வாழத் துடிக்க,
வீதிகள் தான் அவர்களின் முகவரி.
அவர்கள் கேட்பது இரக்கம் அல்ல.
மனிதர்களாய் ஏற்றுக் கொள்ளும் ஒரு உரிமை மட்டுமே.
ஆனாலும் தற்போது நிறைய முன்னேற்றம்.
மக்களின் அங்கீகாரம் ஓரளவு
கிடைத்தது விட்டது.
நன்கு படித்து பட்டம் பெற்று உயர் பதவியில் பணிபுரியும் அளவுக்கு உயர்ந்து விட்டார்கள்.
பழைய அவப்பெயரை
துடைத்தெறிந்து சமூக செல்வாக்கு பெற்ற உயர் குடிகளாக அனைவரும் வாழ
இந்தப் புத்தாண்டில் வாழ்த்துவோம்.

உ.மு.ந.ராசன்கலாமணி
கோவை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?