புத்தாண்டில் புத்தெழுச்சி வரவே வேண்டும் புத்தாக்கம் நாமெல்லாம் பெறவே வேண்டும்
புத்தாண்டில் நம்பிக்கை நாட வேண்டும்
பூரிக்கும் எண்ணங்கள் கூட வேண்டும்
வித்தான முயற்சிகளில் திளைக்க வேண்டும்
வியர்வையை சிந்திநாமும் உழைக்க வேண்டும்
சொத்தாகப் பண்பன்றோ நிலைக்க வேண்டும்
சோர்வெல்லாம் இல்லாமல் போக வேண்டும்
எந்திரத்தின் போக்கெல்லாம் வாழ்க்கை தன்னில் எள்ளளவும் தங்காமல் ஓட்ட வேண்டும்
தந்திரமாய் வாழாமல் மற்ற வர்க்கே
தந்துதவும் தர்மத்தைப் பேண வேண்டும்
மந்திரமாய் நற்சொற்கள் முழங்க வேண்டும்
மாண்புகளும் நம்செயலில் துலங்க வேண்டும்
உந்துவிசை போலிங்கே ஊக்கம் வேண்டும்
உலகனைத்தும் அன்பாலே ஆள வேண்டும்
பணம்பெருக்கும் நோக்கத்தை சற்றே மாற்றிப்
பாசமான உறவுகளைப் பெருக்க வேண்டும்
குணம்நாடும் செய்கைகளைப் போற்றி நல்ல
குன்றேறும் புகழ்வாழ்வு பொலிய வேண்டும்
மணக்கின்ற மலர்கள்போல் புதிய ஆண்டில்
மாற்றங்கள் வந்திங்கே மலர வேண்டும்
சுணங்காமல் வாழ்வதையே நோக்கம் ஆக்கிச்
சூரியனாய் ஒளிபரப்ப புலர வேண்டும்!
*கவிஞர் மு.வா.பாலாஜி*
*ஓசூர்*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?