வாய்ப்பு இருந்தால் வாழ்த்துவோம்
வசை பாடுவதை தவிர்ப்போம்
முடிந்தால் புன்னகைப்போம்
முகம் கோணாமல் இருப்போம்
உதவிகள் செய்ய முயல்வோம்
உபத்திரவம் நேராமல் விலகுவோம்
இன்சொல் பேசி பழகுவோம்
இல்லாவிடில் மௌனம் காப்போம்
பாராட்டிட பயில்வோம்
பழி சொல்வதை மறப்போம்
ஊக்கப்படுத்திட உறுதி கொள்வோம்
உதாசீனத்தை உதறிடுவோம்
இதில் ஏதாவது ஒன்றையாவது
பழக்கத்தில் கொள்வோம்
சமூகம் மகிழ
சுமுகமாய் தொடங்குவோம்
இனிய புத்தாண்டு
இன்பமாக அமையட்டும்.
-நாகை பாலா
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%