12 சூட்கேஸ், 20 டைமர்கள்! ஃபரிதாபாத் வெடிபொருள் பறிமுதலில் திடீர் திருப்பம்!!

12 சூட்கேஸ், 20 டைமர்கள்! ஃபரிதாபாத் வெடிபொருள் பறிமுதலில் திடீர் திருப்பம்!!


பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான மிகப்பெரிய நடவடிக்கையாக, ஃபரிதாபாத்தில் 360 கிலோ வெடிபொருள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில், திடீர் திருப்பமாக பெண் மருத்துவர் காரில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


ஹரியாணா மற்றும் ஜம்மு - காஷ்மீர் காவல்துறை இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், ஃபரிதாபாத்தில் வாடகை வீடு ஒன்றில் வெடிபொருள் தயாரிக்கப் பயன்படும் அம்மோனியம் நைட்ரேட் பெரிய அளவில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.


புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் முஸம்மாலுக்கு ஜெய்ஷ் - ஏ - முகமது அமைப்புடன் தொடர்பிருப்பதாக வந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தி, குடியிருப்புப் பகுதியை சோதனை செய்த போது பெரிய அளவில் வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


மருத்துவர் கைது செய்யப்பட்டு 10 நாள்களுக்குப் பின்னர், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனுடன் வெடிபொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஏராளமான பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


இதனுடன், 12 சூட்கேஸ்கள், 20 டைமர்கள், 4 பேட்டரிகள், ரிமோட்கள், 5 கிலோ எடையுள்ள உலோகம், வாக்கி-டாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.


இவற்றை பறிமுதல் செய்திருக்கும் காவல்துறையினர், மிகப்பெரிய அளவில் பயங்கரவாத சதித் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.


மேலும், முசம்மாலின் துப்பாக்கி, அவர் பணியாற்றும் மருத்துவமனையின் பெண் மருத்துவர் காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், இவர்களுக்கும் பெண் மருத்துவருக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பெண் மருத்துவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் தற்போது ஜம்மு -காஷ்மீரில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.


ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்த மருத்துவர், பிறகு ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அதில் வெடிபொருள்களை நிரப்பி வைத்திருக்கிறார். பாதுகாப்புக் காரணங்களுக்காக மேலதிகத் தகவல்களை பகிர்ந்துகொள்ள முடியாது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.


இவர்களது சமிக்ஜைக்காக, இந்திய எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகள் யாரேனும் தயாராக இருக்கிறார்களா, எல்லைத் தாண்டி இவர்களுடன யார் யார் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%