*🙏🕉️ஸ்ரீ ராமஜெயம் 🕉️🙏*
*🙏🕉️ஜெய் ஸ்ரீ ராம் 🕉️🙏*
*🙏🕉️🤲ஏழரை சனியை விரட்டும்*
*ஆஞ்சநேயர் வழிபாடு:🤲🕉️🙏*
*🙏🤲🙇♂️ஆஞ்சநேயர் மூலம் நட்சத்திரத்தில் தோன்றியவர் ஒருசமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க வந்தார்.*
*🙏ஆஞ்நேயர் பொதுவாக தினமும் தோட்டத்தில் மலர்ந்த பூக்களைப் பறித்து ராமரை வழிபட்டு பாடல்களைத் தன்னை மறந்து பாடிக் கொண்டிருப்பார்.....*
*🙏அன்று தன்னைப் பிடிக்க சனீஸ்வரர் வாசலில் காத்துக் கொண்டிருப்பதைத் தெரிந்து கொண்டார் ஆஞ்நேயர்.*
*🙏சனி பகவான் அவர் கடமையைச்* *செய்ய வந்துள்ளார்*
*செய்யட்டும்....* *நான் எனது கடடையைச்* *செய்கிறேன் என்று*
*நினைத்தபடியே* *இருந்தார்......*
*🙏மாளிகையை விட்டு வெளியில் செல்லும் போது தனது வாலின் நுனியை மட்டும் நீட்டினார்.....*
*🙏வெளியில் காத்துக் கொண்டிருந்த சனி பகவான்* *ஆஞ்சநேயரின் வாலைக் கண்டதும் அவரது வாலில் ஏறி* *அமர்ந்து இறுக்கிப்*
*பிடித்து* *கொண்டார்..*
*🙏சனி பகவானை விரட்டுவது எப்படி என சிறிது நேரம் யோசித்தார் ஆஞ்சநேயர்.*
*🙏ராமபிரானைத் துதிக்கும் போது துள்ளிக் குதித்துக் கொண்டே வழிபட வேண்டும் என முடிவு எடுத்தார்.*
*🙏அதன் படியே ஆஞ்சநேயர் குதிக்கத் தொடங்கினார்.*
*🙏இதனால் வாலின் நுனியில் இருந்த சனி பகவானுக்கு உடல் வலி எடுத்தது.*
*🙏ஆஞ்சநேயர் குதிப்பதை நிறுத்திவிட மாட்டாரா என யோசித்த சனி* *பகவான் உடல் வலி அதிகமாகவே*
*ஆஞ்சநேயரிடம் எப்போது குதிப்பதை நிறுத்து வாய்? என்று கேட்டார்....*
*இதைக்கேட்டதும்*
*சனி பகவானே*
*ஏழரை வருஷத் திற்கு துள்ளிக்* *குதித்துக் கொண்டே தான் இருப்பேன்*
*என்றார்.....சனி பகவான் பயந்து போனார்...*
*இனிமேலும் ஆஞ்நேயரைப் பிடித்துக் கொண்டிருப்பதால்*
*நமக்கு எந்தப்பயனும் இல்லை என யோசித்த சனி பகவான்*
*ஆஞ்சநேயரை விட்டு விலகி விட முடிவு செய்தார் ...*
*அதன்படி ஆஞ்சநேயரிடம் சொல்லிவிட்டு வெளியேறினார் சனி பகவான்....*
*ஆஞ்சநேயரும் மிகவும் மகிழ்ந்து சனி பகவானிடம் வேண்டுகொள் விடுத்தார்.....*
*🙏சனீஸ்வரா என்னை விட்டு விலகியது போல் ஏழரை ஆண்டு சனி பிடிக்கும் போது*
*உன்னிடமிருந்து விலக வேண்டும்* *என நினைத்து என்னை வழிபடும்*
*என் பக்தர்களுக்கு எந்தத் தொந்தரவையும்* *சங்கடத்தையும் நீ கொடுக்கக்கூடாது*
*எனக் கேட்டுக் கொண்டார்......*
*சனி பகவான் சம்மதித்தார்*
*எனவே ஏழரை சனி அஷ்டம சனியின் போது நமது துயரங்கள் விலக* *ஆஞ்சநேயரை வழிபட்டால்*
*பக்தர்கள் சனி பகவானிடமிருந்து*
*விடை பெறுவதற்கு ஆஞ்சநேயர் துணைபுரிவார்...💐🌷🌹🤲👣🙇♂️🕉️🙏*
*🙏🕉️🤲வழிபடுங்கள் மனமார 🤲பிராத்தனை செய்யுங்கள்* *இராமதூதனை...💐🌷🌹🤲👣🙇♂️🕉️🙏🙏*
*🙏🕉️ஜெய் ஸ்ரீ ராம் 🕉️🙏*