வீண் செலவுகளை தவிர்க்கலாமே

வீண் செலவுகளை தவிர்க்கலாமே




இன்று நம்மில் பலர் வேண்டாத 


பொருட்களை எல்லாம் வாங்கி 


குவித்து வருகிறார்கள். கையில் 


ஏடிஎம் கார்டு கிரெடிட் கார்டு 


இருந்தால் போதும். கண்ணில் 


 பட்டதையும் மனதில் 


 தோன்றியதையும் வாங்கி குவித்து 


வருகிறார்கள் . அமேசான் பிளிப்கார்ட் 


போன்றவற்றில் ஆடம்பரமான 


காலணிகள் வாசனை திரவியங்கள் 


எலக்ட்ரானிக் பொருட்கள் 



 என ஆடம்பரத்துக்காக 


வாங்கிவிட்டு பின்னால் கையில் 


காசு இல்லாமல் சங்கடப்படுகிறார்கள். 



இந்த நிலை மாற வேண்டும். 


ஒரு சாமான் வாங்கும் போது 


ஒன்றுக்கு பலமுறை யோசனை 


செய்ய வேண்டும். இந்தப் பொருள் 


நமக்கு கண்டிப்பாக தேவையா 


இல்லையோ என்பதை ஆராய்ந்த 


பின்னரே வாங்க வேண்டும். 


மற்றவர்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் 


வாங்கியிருக்கிறார்கள் நாமும் 


வாங்க வேண்டும் என்ற சிந்தனையை 


தவிர்ப்பது நல்லது. அப்படி ஏதேனும் 


பொருட்களை வாங்கிவிட்டு 


அதனை ஒரு வாரம்


 பயன்படுத்திவிட்டு பின்னர் 


வீட்டின் மூலையில் எங்காவது 


 கிடக்கும் பல மாதங்கள் கழித்து 


அது குப்பைக்கு அல்லது 


பழைய விலைக்கு தள்ள வேண்டிய 


சூழ்நிலை ஏற்படும். தேவைக்கு 


அதிகமான பொருட்களை வாங்கி 


குவித்துவிட்டு பின்னர் 


மாதக் கடைசியில் கையில் காசு 


 இல்லாமல் எத்தனையோ 


 குடும்பங்கள் அவதிப்படுவதை 


நாம் கண்கூடாக காண்கிறோம்



எந்த பொருளை வாங்க வேண்டும் 


என நினைத்தாலும் நமக்கு 


அது தேவைதானா என்பதை 


ஒரு முறைக்கு பலமுறை யோசனை 


 பண்ணி வாங்க வேண்டும் 


இதன் மூலம் பொருள் 


 விரையத்தையும் பணவிரயத்தையும் 


தவிர்க்கலாம். 


ஒருமுறை சாக்ரடீஸ்


 கடைவீதிகளுக்கு தினசரி சென்று 


ஒவ்வொரு கடையாக சுற்றிப் 


 பார்த்துவிட்டு ஒன்றும் வாங்காமல் 


திரும்பி விடுவார். இப்படியே 


தொடர்ந்து ஒரு வாரம் எல்லா 


 கடைகளுக்கும் சென்று பார்த்துவிட்டு 


ஒன்றும் வாங்காமல் சென்று விடுவார் 



கடைசியாக கடைக்காரர்கள் 


சாக்ரடீஸிடம் தினசரி 


வந்து எங்கள் கடைகளை பார்த்து


 விட்டு செல்கிறீர்கள். ஒன்றும்


 வாங்கவில்லையே ஏன் 


உங்களுக்கு எந்த பொருள் வேண்டும் 


என சொல்லுங்கள் நாங்கள் வாங்கி 


தருகிறோம் என்றார்கள். 



சாக்ரடீஸ் சிரித்துக்கொண்டே 


இந்தக் கடைகளில் உள்ள 


எந்த பொருளும் என் வீட்டில் இல்லை 


இருந்தாலும் நான் இத்தனை


ஆண்டுகள் சந்தோசமாகவும் 


மன நிம்மதியாகவும் வாழ்ந்து 


 வருகிறேன் என்றாராம். 


இதைக் கேட்ட கடைக்காரர்கள் 


அனைவரும் வாயடைத்து 


 போனார்கள்.


எனவே நீங்கள் தேவையில்லாத 


பொருட்களை வாங்கினால் 


தேவையான பொருட்களை விற்க



 வேண்டிய சூழ்நிலை 


வரும். எனவே அனைவரும் 


இருப்பதைக் கொண்டு சந்தோசமாக 


வாழ்வது நலம்.



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%