news Breaking News
clock

எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக செல்வப்பெருந்தகை, வைகோ சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக செல்வப்பெருந்தகை, வைகோ சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்


சென்னை,


தமிழக சட்டமன்றத்தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வேலைகளில் தேர்தல் கமிஷன் இறங்கியுள்ளது. இதனையடுத்து வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ. ஆர்.) மாநிலம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது.


தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை மேற்கொள்வதற்கு ஆரம்பம் முதலே தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக திமுக தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்ப்புகள் இருந்தபோதிலும் தேர்தல் கமிஷன் சிறப்பு திருத்த பணியை தொடங்கியது.


இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News