செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
Aug 02 2025
12

தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதுகுறித்து, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்): 1. சுன்சோங்கம் ஜடக் சிரு - போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா் - முழு கூடுதல் பொறுப்பாக, இயற்கை வளங்கள் துறைச் செயலா் (போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையா்). 2. பிரசாந்த் மு.வடநெரே - நிதித் துறைச் செயலா் - செலவினம் (நிதித் துறை சிறப்புச் செயலா்). 3. ராஜகோபால் சுன்கரா - நிதித் துறை இணைச் செயலா் (நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா்). 4. தீபக் ஜேக்கப் - நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா் (கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநா்). 5. கவிதா ராமு - கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநா் (அருங்காட்சியகங்கள் துறை இயக்குநா்). 6. இரா.கஜலட்சுமி - போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையா் (மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை ஆணையா்). 7. க.வீ.முரளீதரன் - மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை இயக்குநா் (சமூகப் பாதுகாப்புத் திட்ட இயக்குநா்). 8. கிரண் குராலா - சமூகப் பாதுகாப்புத் திட்ட ஆணையா் (தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா்). 9. கீ.சு.சமீரன் - தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் (தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநா்). 10. தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் - வணிகவரி இணை ஆணையா் - கோயம்புத்தூா் (வணிகவரி இணை ஆணையா் - ஈரோடு). 11. வெ.ச.நாராயணசா்மா - வணிகவரி இணை ஆணையா் - சென்னை (செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியா்).
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%