எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி: 1, 2-வது நடைமேடை ஆகஸ்ட் முதல் வாரத்தில் திறக்க முடிவு

எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி: 1, 2-வது நடைமேடை ஆகஸ்ட் முதல் வாரத்தில் திறக்க முடிவு

சென்னை:

தமிழகத்​தில் முக்​கிய ரயில் நிலை​யங்​களில் ஒன்​றான எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில், ரூ.734.91 கோடி மதிப்​பில் மறுசீரமைப்பு பணி நடை​பெறுகிறது. இங்கு பன்​னடுக்கு வாகன நிறுத்​து​மிடம், வணிக வளாகம் அமைக்​கும் பணி, பார்​சல் அலு​வல​கக் கட்​டிடப் பணி என பல்​வேறு பணி​கள் நடை​பெறுகின்​றன. இதுத​விர, ரயில் நிலை​யத்​தில் 1-வது நடைமேடை முதல் 11-வது நடைமேடை வரை இணைக்​கும் வித​மாக, நடைமேம்​பாலம் அமைப்​ப​தற்​காக ஆரம்​பக் கட்​டப்​பணி​கள் தொடங்​கின.


இதற்​காக, ரயில் நிலை​யத்​தின் 1, 2-வது, நடைமேடைகள் ஜூன் முதல் வாரத்​தில் மூடப்​பட்​டன. இதைத் தொடர்ந்​து, 3, 4-வது நடைமேடைகள் மூடப்​பட்​டன. இதன் காரண​மாக, சென்னை எழும்​பூர்- மதுரை இடையே இயக்​கப்​பட்ட தேஜஸ் விரைவு ரயில், மன்​னார்​குடிக்கு இயக்​கப்​பட்ட மன்னை விரைவு ரயில் உள்பட 6 ரயில்​கள் தாம்​பரம் நிலை​யத்​துக்கு மாற்​றப்​பட்​டன.


இதுத​விர, சென்னை எழும்​பூர் - புதுச்​சேரி இடையே இயக்​கப்​பட்ட விரைவு ரயில் உள்பட சில ரயில்​கள் கடற்​கரை ரயில் நிலை​யத்​துக்கு மாற்​றப்​பட்​டன. இந்த ரயில்​கள் அந்​தந்த ரயில் நிலை​யங்​களில் இருந்து தற்​போது இயக்​கப்​படு​கின்​றன. இந்​நிலை​யில், எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் 1, 2-வது நடை மேடை ஆகஸ்ட் முதல் வாரத்​தில் திறக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. அதன்​படி, சில ரயில்​கள் இங்​கிருந்து மீண்​டும் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.


இது குறித்​து, தெற்கு ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: ரயில் நிலை​யத்​தில் 1-வது நடைமேடை முதல் 11-வது நடைமேடை வரை இணைக்​கும் வித​மாக, நடைமேம்​பாலம் அமைய உள்​ளது. இவற்​றில் ஒரு பகுதி பார்​சலுக்​காக​வும், மற்​றொரு பகுதி பயணி​களுக்​காக​வும் ஒதுக்​கப்பட உள்​ளது.


3 நடைமேடைகள் மூடல்? - நடைமேம்​பால அடித்தள பணிக்​காக, 1 முதல் 4-வது நடைமேடை வரை மூடப்​பட்​டு, அங்கு அடித்​தளம் அமைக்​கும் பணி முழு​வீச்​சில் நடை​பெற்று வரு​கிறது. ஒவ்​வொரு இடத்​தி​லும் அடித்​தளம் அமைக்க 2 மாதங்​கள் ஆகும். அதன்​படி, 1, 2-வது நடைமேடைகளில் அடித்​தளம் அமைக்​கும் பணி ஆகஸ்ட் முதல் வாரத்​தில் முடிந்​து​விடும். தொடர்ந்​து, 1, 2-வது நடைமேடைகளை எங்​களிடம் ஒப்​பந்த நிறு​வனம் ஒப்​படைப்​பார்​கள்.


இதன் பிறகு, 2-வது நடைமேடை​யில் இருந்து சென்னை - மதுரை தேஜஸ் ரயிலை​யும், சென்னை - புதுச்​சேரி விரைவு ரயிலை​யும் இயக்க திட்​ட​மிட்டு உள்​ளோம். இதற்​கிடை​யில், 5 முதல் 7 -வது வரையி​லான 3 நடைமேடைகளில் அடித்​தளம் அமைக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இப்​பணிக்​காக, நடைமேடைகள் மூடு​வது தொடர்​பாக ஆலோ​சனை நடை​பெறுகிறது. இருப்​பினும் இது​வரை இறுதி முடிவு எடுக்​கப்​பட​வில்​லை. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%