“சுகுணா கலை அறிவியல் கல்லூரியில் திறன் மேம்பாட்டு வழிகாட்டுதல் நிகழ்ச்சி”
Aug 30 2025
17

கோயமுத்தூர் நேரு நகர் சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை மற்றும் மேலாண்மை துறை ஒருங்கிணைப்பில் மாணவர்களுக்கு "உங்கள் தொழிலை மேம்படுத்துதல்: மதிப்பு கூட்டப்பட்ட திறன்கள் மூலம் வாய்ப்புகளைத் திறக்கவும்".மற்றும் "மதிப்பு கூட்டப்பட்ட திறன்கள் மூலம் நிதித்துறையில் எதிர்கால தொழில் வழிகாட்டுதல்"என்னும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி சுகுணா கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர்களாக காயத்ரி வெங்கடபதி ,முதுநிலை பயிற்றுனர் ஸ்ரீ கிருஷ்ணா ஐ டெக் மேனேஜ்மென்ட் சொலூஷன்ஸ் அவர்களும் ஜெபாஸ் சிரஸ் ,மெய்நிகர் கணக்கு மேலாளர் ஆக்குடன்ட் பிசினஸ் கன்சல்ட்டண்ட் அவர்களும் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர் இந்த நிகழ்விற்கு முதல்வர் ஆர்.ராஜ்குமார் மற்றும் இயக்குனர் வி .சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் துறைத்தலைவர் மீனாட்சி சாரதா வரவேற்புரை வழங்கினார் ,கல்லூரி தாளாளர் லட்சுமி நாராயணசாமி மற்றும் தலைவர் சுகுணா லட்சுமி நாராயணசாமி ஆகியோரது வழிகாட்டுதலின்படி இந்நிகழ்ச்சி நடைபெற்றது நன்றியுரையினை உதவிப் பேராசிரியர்கள் அமுதநாயகி மற்றும் ஸ்ரீ பத்ம அபிராமி ஆகியோர் வழங்கினார் இந்த நிகழ்வில் வணிகவியல் மற்றும் மேலாண்மை துறைசார்ந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர் .
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?