வாணியம்பாடி நகராட்சி 20 மற்றும் 22 வது வார்டு மக்களுக்கு 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
Aug 30 2025
143
வாணியம்பாடி நகராட்சி 20 மற்றும் 22 வது வார்டு மக்களுக்கு நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை நகரமன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி 20 மற்றும் 22 வது வார்டு பகுதி மக்களுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் முஸ்லிம்பூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு நகராட்சி ஆணையாளர் ரகுராமன் தலைமை வகித்தார். நகரமன்ற துணைத்தலைவர் கயாஸ் அஹமத்,நகர மன்ற உறுப்பினர்கள் வி.எஸ்.சாரதி குமார், ஷாஹீன் பேகம் சலீம், சித்ரா தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நகரமன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன் கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்தார்.
முகாமில் கலைஞர் மகளிர் உரிமை தொகை, வருவாய் துறை, மின்சார துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட 14 பல்வேறு துறைகளுக்கான தனித்தனி அரங்குகள் அமைக்கப்பெற்று, அந்தந்த துறைகளுக்கு தொடர்பான மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, மனுக்களை பதிவுசெய்து, அதற்கான விண்ணப்ப ரசீது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான சான்றிதழ்களை நகர மன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன் வழங்கினர்.
முகாமில் வட்டாட்சியர் சுதாகர், நகராட்சி அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?