பகலென் றிருந்தால்
இரவொன் றிருக்கும்!
இரவொன் றிருந்தால்
விடிவொன் றிருக்கும்!
பிறப்பொன் றிருந்தால்
இறப்பொன் றிருக்கும்!
சிறப்பொன் றிருந்தால்
பொறுப்பொன் றிருக்கும்!
இன்பொன் றிருந்தால்
துன்பொன் றிருக்கும்!
அன்பொன் றிருந்தால்
அருளொன் றிருக்கும்!
வரவொன் றிருந்தால்
செலவொன் றிருக்கும்!
நன்மையொன் றிருந்தால்
தின்மையொன் றிருக்கும்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%