வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கு முழு ஆதரவு: ஐசிசிக்கு பாக். வாரியம் கடிதம்
Jan 22 2026
11
2026 ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் பங்களாதேஷ் அணியின் பங்கேற்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) கடிதம் எழுதி, இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் விளையாட விரும்பவில்லை என்ற வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் நிலைப்பாட்டுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இந்தக் கடிதத்தின் நகல் ஐசிசி வாரிய உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக ஆங்கில கிரிக்கெட் இணையதளம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வங்கதேச அரசின் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல், “பிசிசிஐ தரும் அழுத்தத்தின் காரணமாக ஐசிசி எங்களுக்கு அழுத்தம் தர முயற்சித்தால் நாங்கள் அதற்கு அடிபணிய மாட்டோம். எந்த ஒரு காரணமுமின்றி ஐசிசி வைக்கும் நிபந்தனைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
கடந்த காலங்களில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டோம் எனக் கூறியதால், போட்டி நடத்தப்படும் இடங்களை ஐசிசி மாற்றியது. தர்க்கரீதியான அடிப்படையில் மைதானத்தை மாற்றுமாறு நாங்கள் கேட்டுள்ளோம், மேலும் நியாயமற்ற அழுத்தத்தைக் கொடுத்து இந்தியாவில் விளையாடுமாறு எங்களை வற்புறுத்த முடியாது” என்று கூறியிருந்தது. வங்கதேசத்தின் இந்த நிலைப்பாட்டுக்குத்தான் இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் தன் ஆதரவைத் தெரிவித்துள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?