அன்று ஞாயிற்றுக்கிக்கிழமை.வீட்டில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்தேன். நண்பன் கோவிந்தன் வீட்டினுள் நுழைந்தான்.அவன் முகம் படபடப்பில் காணப்பட்டது !
" நண்பா ! வெரி அர்ஜண்ட் ! ரெண்டு லட்சம் கைமாத்து வேணும். கட்டிட்கி ட்க்கிட்டிருக்குற வீட்டுக்கு நாளை வெதரிங் கோர்ஸ் போடறேன். டேட் ஃபிக்ஸ் பண்ணியாச்சு..ப்ளீஸ் நண்பா !" அவன் கெஞ்ச நான் திகைத்தேன்.
இதுவரை கோவிந்தன் அவ்வளவு பெரிய தொகை கேட்டது கிடையாது. ஐந்தாயிரமோ இல்ல பத்தாயிரமோ வாங்கியிருக்கிறான். சொன்ன தேதிக்கு முன்னாலயே பணத்தை திருப்பிக் கொடுத்திருக்கிறான். இவ்வளவு பெரிய தொகையை
எப்படி திருப்பி செலுத்துவான் ! என் மனதில் குழப்பம் !
" என்ன நண்பா யோசிக்கறே ? உன்னை நம்பி வந்திருக்கிறேன். தயங்காமல் ஹெல்ப் பண்ணு நண்பா !"
" கோவிந்தா ! தொகை பெரிசா கேட்கிறே.உன்னால எப்படி திருப்பி கொடுக்கமுடியும் ?"
"உன் சந்தேகம் புரியுது நண்பா ! என் தந்தையின் பூர்விக பழைய வீடு ஒண்ணுகிராமத்தில இருக்கு. அதை எங்கண்ணன் விக்க முயற்சி பண்ணி க்கிட்டுருக்கான். ஒருமாசத்துக்குள்ள வித்துடுவோம்என் பங்குக்கு நிச்சயம் அஞ்சு லட்சம்வரும். வந்தவுடன்கொடு த்துடறேன் நண்பா ! "
நண்பனைப் பார்க்க பாவமாய் இரு ந்தது.அதோடு அவனின் கண்ணிய மும் நேர்மையும் நான் அறிந்ததே !
பேச்சை கிச்சனிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த மனைவி சுதா என்னை அழைத்தாள். நானும் எழுந்து சென்றேன்.
" இதோபாருங்க ! உங்க நண்பர் கேட்ட
பணத்த தூக்கி கொடுத்துராதீங்க. பணம் திரும்பி வரலேன்னா நஷ்டம் அதிகம் !" என் காதில் கிசு கிசுத்தாள்.
" பாவம் கோவிந்தன் என்னை நம்பி வந்துட்டான்...அவன் நேர்மையா னவன். சொன்ன தேதிக்கு முன்னா லயே நம்மக்கிட்ட வாங்கிய பணத்த திருப்பிக் கொடுதிருக்கான். அதை மறந்துட்டியா சுதா?"
" அப்போ நீங்க தந்தது சின்ன தொகை!அதனால அவரால ஈஸியா திருப்பிக் கொடுக்க முடிஞ்சது. இப்போ அவர் ரெண்டு லட்சமில்ல கேட்கிறார் ?"
நான் புன்னகைத்தேன். " சுதா ! எப்படி
திருப்பி கொடுக்கறதா அவன் பேசி னத நீ கேட்கல்லியா ?"
" ம்.ம்..கேட்டேன். எனக்கு என்னவோ நம்பிக்கை இல்ல."
"எனக்கு நம்பிக்கை இருக்கிறது . அவன் சொன்ன சொல் தவறமாட் டான்.நாணயமானவன். தயவுசெஞ்சு இந்த விஷயத்துல நீ குறுக்க வராதே ! " அவளைக்கடிந்தபடி வெளிப்பட்டேன்.
லீசுக்காக நிலத்தை கொடுத்த பணம்
ரூபா மூணுலட்சம் நேற்று மாலை கிடைத்தது. அதிலிருந்து இரண்டு லட்சத்தை அறையிலிருந்த பீரோவி லிருந்து எடுத்துக் கொண்டு வெளி ப்பட்டேன்.
முகத்தைத் தொங்கப்போட்டவாறு அமர்ந்திருந்த நண்பன் கோவிந்தன் நான்பணத்தோடு வந்ததும் முகம் மலர்ந்தான்.
நான் கொடுத்த பணத்தை சந்தோஷ த்து பெற்றுக்கொண்டவன் தான் கொண்டுவந்திருந்த மஞ்சள் காட்டன் பைக்குள் வைத்தான்.
வாயெல்லாம் பல்லாக , " ரொம்ப நன்றி நண்பா ! நீ நேரத்துக்கு செய்த இந்த உதவியை நான் என்னிக்கும் மறக்கமாட் டேன்." என்றவன் கையோ டு வைத்திருந்த ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்தான். என்னிடமிருந்து இன்ன தேதியில் இரண்டு லட்சம் பெற்றுக்கொண்டதுக்கான புரோ நோட் எழுதினான். பிறகு அடியில் ரெவின்யு ஸ்டாம்ப் ஒட்டி அதில் கையெழுத்திட்டான். அதை என்னி
டம் நீட்டினான்.
" இதெல்லாம் எதுக்கு கோவி ந்தா !".நான் கேட்க அதற்கு அவன் " நண்பா ! முன்னால நீ கொடுத்தது சின்ன அமவுண்ட். அதை பெருசா எடுத்துக்கல்ல. ஆனால் இந்தத் தடவை தொகை பெரிசு. எல்லாம்
ஒரு சேப்டிக்காகத்தான்..." என்றவன்
எழுந்து நின்றான். மறுபடியும் நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டான் .
புரோநோட்டை வாங்கிபத்திரமாக ஒருபையில் பீரோவில் வைத்து மூடினேன்.
நாட்கள் ஓடின.
அன்று சுதா ஒரு மஞ்சள்நீராட்டு விழா
விற்குப் போய்விட்டு பதற்றத்துடன் வீடு திரும்பினாள்.
" என்னங்க ! ஒரு விஷயம்தெரியுமா ?"
" இரு இரு " இடைமறித்து தொடர்ந் தேன்.
" நீ என் நணபன் கோவிந்தன்மேல் சந்தேகப்பட்டியே ! சொன்னபடி ரூபா ரெண்டு லட்சத்த கொண்டுவந்து கொடுத்துட்டான் !"
" என்னது...கொடுத்துட்டாரா....எப்போ
வந்து கொடுத்தார் ?" குரலில் பதற் றம் !
" அரைமணிக்கு முன்னால வந்திருந்
தான். இரண்டு லட்சம் எண்ணி அதே
மஞ்சள் பையில் போட்டு கொடுத் தான். வாங்கி பீரோலாக்கரில் வச்சே ன். அவன் எழுதிக்கொடுத்தபுரோநோ ட்டையும்.தன்கையாலயே கிழிச்சுப் போட்டுட்டான் " கொஞ்சம் கர்வத்து டன் கூறினேன்.
" நாசமாப் போச்சு ! ஒன்ஹவர்முன்னா
டியே உங்க நண்பர் அந்த கோவிந்தன்
பைக் ஆகஸிடெண்ட்டுல சட்னியாகிட்
டாராம் ! நீங்க என்னன்னா கதை?அளக்கறீங்க ! "
நான் அதிர்ச்சியுற்றேன் எழுந்துபோய்
பீரோவைத்திறந்து லாக்கரைச் செக்
பண்ணினேன். பணம் இல்லை. சந்தே
கத்துடன் பையைத்திறந்துபார்த்ததில்
கோவிந்தன் எழுதிக் கையொப்பமிட்ட
புரோரோட் என்னைப் பார்த்து சிரித் தது!
சே! ஒருகணம் கண் அசந்த சமயம்
வந்த கனவில் தோன்றிய நிகழ்வு
உண்மையை உறைக்க வைக்க இடி
ந்து போனேன் !
.........................................................................
வி.கே.லக்ஷ்மிநாராயணன்
........................................