இந்தியர்களை வேலைக்கு அமர்த்தும்
நாட்கள் முடிவுக்கு வந்துவிட்டது
என ட்ரம்பு அறிவிப்பு. தேர்தல்
ஆணையும் தவறாக செயல்படுகிறது
என ராகுல் குற்றச்சாட்டு.
லட்சுமி நாராயணன் எழுதிய
வலி என்ற கதை உண்மையிலேயே
மனதை வலிக்க வைத்தது.
பிரிட்டன் உடன் தடையற்ற
வர்த்தகம் இந்தியா செய்ய உள்ளது
மோடி பெருமிதம். முதல்வருக்கு
அப்பல்லோவில் ஆஞ்சியோ பிளாஸ்டி
சிகிச்சை செய்யப்பட்டது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு
சீனர்களுக்கு சுற்றுலா பயணம்
செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது
தர்மஸ்தலாவில் 100
இளம்பெண்களுக்கு மேல்
கொலை செய்து புதைத்து உள்ளனர்
1600 மாணவர்களின் கல்விச்செலவை
அமைச்சர் பெரியசாமி
ஏற்றுக்கொண்டார். உண்மையிலேயே
பாராட்ட வேண்டிய செயலாகும்.
ரமேஷ் எழுதிய கேள்வி தீ என்ற
கட்டுரை அற்புதமாக இருந்தது.
நாக பஞ்சமி பற்றிய கட்டுரை பல
அரிய தகவல்களை அறிய முடிந்தது
முத்து ஆனந்த் அவர்களின்
நான் ஆசைப்பட்டால் கவிதை
வரிக்கு வரி படிப்பதற்கு ஆசையாக
இருந்தது. நெல்லை குரலோன்
அவர்கள் எழுதிய உலக அதிசயம்
என்ற கவிதை எழுச்சிமிக்க
கவிதையாக இருந்தது.
கோவிந்தராஜ் எழுதிய
பொறுமையால் வெல்லலாம்
என்ற கட்டுரை பொறுமையின்
அர்த்தத்தை உணர்த்தியது.
ஏலக்காய் மலை பற்றிய கட்டுரை
படித்தவுடன் ஏலக்காய் வாசனையை
உணர்வு போல் இருந்தது.
பனகல் பார்க் டு கோடம்பாக்கம்
வரை மெட்ரோ ரயில் பணிகள்
முடிவடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
மதுரை ஆதீனத்தின் முன் ஜாமின்
மனுவை ரத்து செய்யக்கோரி
காவல்துறை புதிதாக மனுச்
செய்துள்ளது. என்னடா இது
மதுரை ஆதீனத்துக்கு வந்த சோதனை
உத்தர பிரதேசத்தில் போலி தூதரகம்
நடத்தியவர்கள் கைது.
இது போன்று அதிசயங்கள்
உத்தரப் பிரதேசத்தில் சகஜமாக
நடக்கிறது. பாகிஸ்தான் ஒரு
பயங்கரவாத நாடு என ஐநாவில்
இந்தியா தெரிவித்துள்ளது.
இவர்களும் சொல்லிக் கொண்டுதான்
இருக்கிறார்கள். பாகிஸ்தானும்
அவ்வப்போது இந்தியாவில்
எல்லையில் தாக்கிக் கொண்டுதான்
இருக்கிறார்கள். அணு சக்தி
தொடர்பான சோதனைகளை
தொடர போவதாக ஈரான் அறிவிப்பு
தினசரி இந்திய செய்திகள் ஆகட்டும்
உலக செய்திகள் ஆகட்டும்
நொடி பொழுதில் சேகரித்து
அன்றைய தினம் வெளியிடுவதில்
தமிழ்நாடு இ பேப்பர் சிறந்து
விளங்குகிறது. வழக்கம்போல
இன்றைய கவிதைகள் கட்டுரைகள்
அனைத்தும் சூப்பர் விதமாக
அமைந்தது பாராட்டத்தக்கது.
அனேகமாக தெய்வம் இதழ்
சந்தா கட்டிய அனைவருக்கும்
கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்
மேலும் சந்தா கட்டாதவர்கள்
அதற்கு சந்தா கட்டி ஆதரவளித்து
அதன் முன்னேற்றத்திற்கு
பாடுபட வேண்டும் என்று
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி