வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி)..25.07.25

வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி)..25.07.25



தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தில் இருந்து வெளிவரும் அருள் தரும் தெய்வம் இதழை எங்கள் வீட்டுக்கு வந்திருந்த சங்கரன் கோவில் உறவினர்

(சங்கை ராமர்) மேலோட்டமாகப் புரட்டி பார்த்தார். அவ்வளவு தான்.படிக்க அவகாசம் இல்லை அவருக்கு.

எப்போது வந்தாலும் காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டு தான் வருவார்.

' இந்த புக்கை நீங்க படிச்சிட்டீங்களா?'

கையில் தெய்வத்தைப் பிடித்துக் கொண்டே கேட்டார். 

'நாங்க எல்லாரும் படிச்சிட்டோம்... நீங்க 

விரும்பினா, வீட்டுக்கு கொண்டு போயி படிங்க...' என்று சொன்னது தான் தாமதம்...உடனே பேக்கில் பத்திரப் படுத்திக் கொண்டார்.

இதெல்லாம் முக்கியம் இல்லை... கிளம்பும் போது அவர் சொன்னது தான் முக்கியம்...

' சின்ன புத்தகம் தான்...ஆனா இதுல தெய்வத்தின் அனுக்ரஹம் இருக்கிற மாதிரி நான் ஃபீல் படுறேன்...நிச்சயமா இந்த புக்கு மக்கள் மத்தியில் விரைவில் பிரபலம் ஆகும்...'

என்று சத்தியம் அடித்துச் சொல்கிற தொனியில் பேசியது எனக்குள் ஆச்சரியம்.

எங்கள் வீட்டில் நானும் என் மனைவியும் படித்தோம். நன்றாக இருக்கிறது என்று மட்டுந்தான் சொல்லத் தோன்றியது. ஆனால் சங்கரன் கோவில் சங்கை ராமர் அவர்களுக்கோ தெய்வம் பத்திரிகையில் கூடுதல் தரிசனம் கிடைத்துள்ளது...

இது பற்றி என் மனைவியிடம் தனியாக பேசும் போது 

பாம்பின் கால் பாம்பறியும் என்று மறைமுகமாக என்னை மட்டம் தட்டிய மகிழ்ச்சி யில் மிதந்தாள்.

இதையெல்லாம் இங்கே குறிப்பிட்டு எழுதுவதற்கு ஒரே காரணம்...

தமிழ் நாடு இ பேப்பரின் இலவச சேவைக்கு நாம் வெறும் நன்றி கூறுவதோடு நின்று விடக் கூடாது.

வாசக நட்புகள் ஒவ்வொருவரும் இதைக் கடமையாக நினைத்து அருள் தரும் தெய்வம் பத்திரிகை யின் சர்குலேஷனை 

உயர்த்தி காட்ட வேண்டும். பண்புள்ளம் கொண்ட நம் வாசக நண்பர்களை மீண்டும் மீண்டும் வேண்டிக் கேட்டுக் கொள்வதற்கு 

வேறு எந்த தனிப்பட்ட சுயநலம் சார்ந்த காரணம் எதுவும் கிடையாது என்பதையும் கூறிக் கொள்கிறேன்.


முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ சிகிச்சை 

துரை முருகன் தகவல்.

நம் முதல்வர் பூரண நலம் பெற்று இல்லம் திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்!


ரூ3 ஆயிரம் கோடி கடன் மோசடி 

அனில் அம்பானி வீடு நிறுவனங்களில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை 


இந்த மாதிரி யான செய்திகளைப் படிக்கும் போது இதயம் கனக்கிறது.

நம்பர் ஒன் பணக்காரராக வேண்டும் என்ற வெறியில் செயல்படும் 

மேல் மட்ட புள்ளிகளின் 

உழைப்புத் திறனையும் பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் உயர்ந்த நோக்கத்தையும் போற்றுவோம்.

ஆனால் அதே நேரத்தில் இந்த மேல் மட்டத்து மாந்தரெல்லாம் அற வாழ்க்கையில் இருந்து பிறழாமல் 

நேர்மைத் திறத்தோடு இயங்கினால் எவ்வளவு நன்மை அளிக்கும் என்று ஏக்கத்துடன் நினைத்துப் பார்க்க தோன்றுகிறது.


கவிதைகள் பக்கம் 

வழக்கம் போல் கன கச்சிதம் சார்!

வே.கல்யாண்குமார்

எழுதிய தந்தைக்கு ஒரு தாலாட்டு கவிதை 

மிகவும் அருமை.

மனதுக்கு இதமாக இருந்தது. கவிஞருக்கு வாழ்த்துகள்!


சினிமா செய்திகளை யும் விட்டு வைக்காமல் 

சிரத்தையுடன் சிந்தை குவித்து செயல்படும் ஆசிரியர் குழுமத்தினரின் அயராத உழைப்பை பாராட்டியே தீர வேண்டும்.

எந்த விஷயத்திலும் 

சிறப்பு! செம்மை!

சபாஷ் சபாஷ்!

சின்னச் சின்ன செய்தி 

கட்டமைப்பிலும் சிங்கார நேர்த்தி மனதை சொக்க வைக்கிறது.

மொத்தத்தில் தமிழ் நாடு இ பேப்பர் சூப்பர் இல்லை சூப்பரோ சூப்பர்!



பி.வெங்கடாசலபதி

தென்காசி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%