வலங்கைமானில் சிவன் ஆலயங்களில் அன்னாபிஷேக பெளர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம், தீபாராதனை நடைபெற்று அன்னதானமும் வழங்கப்பட்டது
Nov 06 2025
44
.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ தையல் நாயகி சமேத ஶ்ரீ வைத்தீஸ்வர் ஆலயம், ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயம், ஸ்ரீ பெரியநாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் ஆலயம் ஆகிய ஆலயங்களில் ஜப்பசி மாத அன்னாபிஷேக பெளர்ணமியை முன்னிட்டு மாலை அபிஷேக ஆராதனைகள், அதனைத் தொடர்ந்து அன்னாபிஷேகம் நடைபெற்று இரவு 7 மணிக்கு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்வில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அந்தந்த ஆலய நிர்வாகம் மற்றும் பக்தர்கள், உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?