வேலூரில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு மகா அன்னாபிஷேகம் மற்றும் அபிஷேகப் பெருவிழா!
Nov 06 2025
24
வேலூர், நவ. 7-
வேலூர் மாநகரம், சாய்நாதபுரம் டி. கே. எம். கல்லூரி சாலை வி. வி. என். கே. எம். சீனியர் செகண்டரி பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இஷ்ட சித்தி வலம்புரி விநாயகர் ஆலயத்தில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு மகா அன்னாபிஷேகம் & அபிஷேகப் பெருவிழா நடைபெற்றது. இதில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது. இறுதியாக அன்னப்படையல் இடப்பட்ட அன்னம் அனைவருக்கும் பிரசாதமாக விநியோகம் செய்யப்பட்டது.இந்த அன்னாபிஷேகத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வி. வி. என். கே.எம். சீனியர் செகண்டரி பள்ளி நிர்வாகத்தினர் வெகு விமரிசையாக செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?