தூத்துக்குடி, நவ. 9-
தூத்துக்குடி அருகே பண்டாரம்பட்டி பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் நெல்சன் பொன்ராஜ். நல்லாசிரியர் விருது பெற்ற இவர், ஏழை எளிய மாணவ, மாணவிகள் பயின்று வரும் இந்த பள்ளியை டிஜிட்டல்மயமாக்கி மாணவர்களுக்கு கணினி கல்வியை கற்றுக் கொடுத்து வருகிறார். மேலும் தனது சொந்த செலவில் பல்வேறு புதிய கட்டடங்களையும் கட்டி கொடுத்துள்ளார். இந்நிலையில் தனது பள்ளியில் படிக்கும் 11 மாணவ, மாணவிகள், பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஆறு பேர் என 17 பேரின் விமானத்தில் பயணம் செய்யும் ஆசையை நிறைவேற்றும் வகையில் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார். அவர்களை கலெக்டர் இளம் பகவத் பாராட்டினார்- பின்னர், அவர்கள் அனைவரும் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கிளம்பிச் சென்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?