வயக்காட்டை உழுதுபோடு

வயக்காட்டை உழுதுபோடு



மாடுகட்டிப் போரடித்தால்

மாளாது செந்நெல்லென்று

யானைகட்டிப் போரடிக்கும்

அழகான தென்மதுரை என்பர்!


இங்கே...

மணப்பாறை மாடுகட்டி

மாயவரம் ஏரூபூட்டி

மணக்கின்ற நெல்மணியை

மாண்பாக விளைத்திடுவர் என்பர்!



மேலும்...

வயக்காட்டே உயிர்க்காடு

வளமைமிகு காடு

வண்ணக்காடு

நயன்மையாய்த் தானியங்கள்

நல்கிடும் நற்காடு என்போம்!


ஆம்...

சேற்றில் கால்வைத்தாலே

சோற்றில் கால்வைக்க முடியும்

ஏற்றமுறு கருத்தையே

உள்ளடக்கிய காடன்றோ வயக்காடு!


நாம்...

பயிர்நாடி வயிறுநாடி

உயிர்நாடி வளம்நாடி

*உழவை உயர்த்துவோம்*!

*உழவரையும் உயர்த்துவோம்*!!



*முனைவர்*

*இராம.வேதநாயகம்*.

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%