
கோவை, ஜூலை 21-
பெரியார் நூலகத்தில் கண்திருஷ்டி படம் அகற்றப்படும் என்று அமைச்சர் வேலு விளக்கம்அளித்தார்.
கோவை காந்திபுரத்தில் ரூ.245 கோடி மதிப்பீட்டில் பெரியார் நூலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2026ல்
ஜனவரியில் இந்த நூலகம் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில், எட்டு அடுக்கு கட்டடமாக இந்த நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இதுவரை ஐந்து அடுக்குமாடி கட்டடம் வரைக்கும் பில்லர்கள் எழுப்பப்பட்டு, சுவர்கள் எழுப்பும் பணிகள் நடந்து வருகின்றன. டைபெற்று வருகிறது. இதன் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி-
பெரியார் நூலகத்தின் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நூலகத்தின் கட்டடம் ரூ.245 கோடி மதிப்பீட்டிலும், புத்தகங்கள் மற்றும் கணினிகள் ரூ.50 கோடி மதிப்பீட்டிலும் அமைக்கப்பட உள்ளது. இதன் கட்டுமான பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். கட்டுமான பொருட்களின் தரத்தை ஆய்வு செய்வதற்காக அரசு பொறியாளர்கள் சிலரை நிரந்தரமாக இங்கு தங்க வைத்து மேற்பார்வை செய்து வருகிறோம்.
கேள்வி- பெரியார் நூலகத்தில் கண் திருஷ்டி படம் வைத்திருக்கிறார்களே?
பதில்- அது ஒப்பந்ததாரர்களின் நம்பிக்கையின் படி வைத்துள்ளார்கள். நான் ஒரு பெரியாரிஸ்ட், கட்டடப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்து எங்களிடம் வரும்போது அந்த திருஷ்டி படம் ஏதும் இருக்காது. நான் பகுத்தறிவாளன். இதுபோன்ற செயலை ஒரு போதும் ஏற்கமாட்டேன். அரசு தரப்பில் இதெல்லாம் வைக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. யாரும் ஒப்பந்தம்போடும் போது திருஷ்டி படம் பற்றி குறிப்பிட்டு ஒப்பந்தங்கள் போடுவதில்லை.
இவ்வாறு அமைச்சர் வேலு கூறினார்.
==
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?