அரசு பஸ்சில் திருவண்ணாமலைக்கு பதில் ரஜினி பட பெயர் 'அருணாசலம்' கண்டக்டரை சஸ்பெண்ட் செய்தது நிர்வாகம்

அரசு பஸ்சில் திருவண்ணாமலைக்கு  பதில் ரஜினி பட பெயர் 'அருணாசலம்'    கண்டக்டரை சஸ்பெண்ட் செய்தது நிர்வாகம்


விழுப்புரம், ஜூலை 21-

அரசு பேருந்தில் திருவண்ணாமலை ஊர் பெயருக்கு பதிலாக 'அருணாசலம்' என்று ரஜினி பட பெயரை பொறித்த கண்டக்டரை விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சஸ்பெண்ட் செய்தது,

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அரசே பயணிகளுக்கு டூர் பேக்கேஜும் வழங்கி வருகிறது. தெலுங்கானா டூர் பேக்கேஜில் திருவண்ணாமலைக்கு பதிலாக 'Arunachalam என்று குறிப்பிட்டிருந்தனர். அதேபோல் தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் அருணாச்சலம் என்று குறிப்பிடப்பட்டு இயக்கப்பட்டன. 

இது மிகப்பெரிய சர்சசையாக மாறியது. ரஜினி படத்தின் பெயரில் தமிழ்நாடு அரசின் பஸ்களை இயக்கலாமா என்று கேள்விகள் எழுந்தன, இதையடுத்து அருணாச்சலம் என்ற பெயர் பலகைகளை அகற்றி விட்டு திருவண்ணாமலை என்ற பெயருடனேயே பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்தது.

இந்த நிலையில், மீண்டும் ஒரு பேருந்து பெயர் பலகையில் அருணாச்சலம் என இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி அரசு பணிமனையில் இருந்து பெங்களூரு சென்ற அரசு பேருந்து எல்.இ.டி திரையில் திருவண்ணாமலை என்பதற்கு பதிலாக 'Arunachalam' என பெயர் இடம்பெற்றது. இது தொடர்பாக புகார் எழுந்ததால், சம்பந்தப்பட்ட பேருந்தின் நடத்துநர் விஜயராகவன் என்பவரை பணியிடை நீக்கம் செய்து, விழுப்புரம் மண்டலம் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஜெயசங்கர் உத்தரவிட்டார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%