பாட்டுக்கு ஒரு பாரதி

பாட்டுக்கு ஒரு பாரதி


முண்டாசு கட்டி வந்து..

 மூண்டெழுந்த பாரதி! 

    ஆ.. பாரதி.. 

முத்தமிழர் நெஞ்சினிலே

 வாழ்பவர் யார்? பாரதி

    ஆம்.. பாரதி.!


கொட்டும் மழைச் சாரலோ..  

  கொக்கரிக்கும் சேவலோ..

    ஓ.. சேவலோ..

குனிந்து தாளில் எழுத வந்து

  நிமிர வைத்தத் தூவலோ.! 

    ஓ.. அவர் தூவலோ!


பாட்டு யெனும் சாட்டை யினை..

  எடுத்து வந்த வீரனோ!

   மா.. வீரனோ.!

கோட்டுப் போட்டு பாட்டு எழுதி.. 

 கொதித் தெழுந்த சூரனோ..

  ஏய்.. சூரனோ.!


மடமை யெலாம் தீயில் போட்டு..

  எரிக்க வந்த ஈசனோ!

     ஓ.. ஈசனோ..!

கொடுமை கண்ட அடிமைகளை..

  எழுப்பிவிட்ட நேசனோ!

      பா.. வாசனோ.!


இன்னும் சொல்லக் கூடுமோ..

  துயில் எழுந்து பாடுமோ.!

   குயில் கூவுமோ!

மன்னவனை பாடப் பாட..

  மனதில் மயிலா டுமோ!

     பாரதியைப் பாடுமோ!


*வே.கல்யாண்குமார்*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%