ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரிக்கை

ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரிக்கை


மதுரை: தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை அலுவ லர் சங்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் வெள்ளிக் கிழமை மதுரையில் மாநிலத் தலைவர் சண்முகம் தலை மையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் குணசேகரன், பொருளாளர் ராஜ குரு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவர் ஞானத்தம்பி பேசினார். இக்கூட்டத்தில், அரசு, தேர்தல் கால வாக்குறுதியான பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஒன்றிய அரசு அறிவித்த 3 சதவீத அகவிலைப் படி உயர்வை மாநில அரசு வழங்க வேண்டும். காலியாக உள்ள மூன்றாம் நிலை பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மீதமுள்ள ஊர்ப்புற நூலகர்களை கால முறை ஊதிய அடிப்படையில் பணியில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%