பாலின ஈர்ப்பு

பாலின ஈர்ப்பு

பாலின ஈர்ப்பு

வயதின் கோளாறு

இயற்கையின் நியதி


காட்டுப் பறவைகளுக்காக

கலங்கவில்லை

கூட்டுக் குயில்களுக்காக

குரல் கொடுக்கின்றேன்


குரோமோசோம்களில் கூட

பெண்கள் தனித்துவமாய்க் கிடக்க

நல்லவனென்றே வேடமிட்டு

நாடி வந்தவளை நாசம் செய்து

தன்மானம் துறந்து

தன் குலத்தை (இனத்தை)

தலை குனியச்செய்து

தன்னிலை மறந்து

மிருகத்தை விஞ்சி

கீழ்நிலைச் சென்றவனே!


பெண்மையை வேரறுக்க

பெண்ணிலிருந்து உதித்தாயோ?


நமக்கொன்று நடந்தால் தான்

நெஞ்சம் பதறுமோ?

இன்னும் உறங்கினால்

அது கல்லறைத் தூக்கமோ?


கற்றுக் கொள்வோம்

ஆண்களை வளர்க்க!


சொல்லி வைப்போம்

பெண்மைக்கு அரண்

ஆண்மை என்று!!!


ஒற்றுமையாக குரல்கொடுப்போம்!

கலக்கம் தீர்க்க எழுந்திடுவோம்!


சமூகம் சீர்பெற உழைத்திடுவோம்!!

உலகம் நலம் பெற வாழ்ந்திடுவோம்


கவிஞர் பாலசந்தர்

மண்ணச்சநல்லூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%