பழனி முருகன் கோயில் சார்பில் 3 ஆண்டில் பக்தர்களுக்கு ரூ.100 கோடி கட்டணமில்லா சேவை
பழனி முருகன் கோவில் சார்பில், பக்தர்களுக்கு சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான கட்டணமில்லா சேவை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பழனி முருகன் கோவிலில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்நாள் வரை 46 லட்சத்து, 86 ஆயிரத்து, 480 பக்தர்களுக்கு கட்டணமில்லா முடி காணிக்கையாக மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை ஒரு கோடியே 14, லட்சத்து 50 ஆயிரத்து 956 பக்தர்களுக்கு இலவச பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டது.
38 லட்சம் பேருக்கு மோர்
மேலும் கடந்த 3 ஆண்டுகளில் நீர்மோர் திட்டத்தின் கீழ் 38 லட்சத்து, 57 ஆயிரத்து, 945 பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பழனிக்கு வரும் பக்தர்களுக்கு மருத்துவ வசதி, பேட்டரி கார் வசதி உட்பட பல்வேறு திட்டங்கள் மூலம் பக்தர்கள் பயன் அடைந்துள்ளனர்.
மேலும் பழனி கோவில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களிலும், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ரூ. 100 கோடி மதிப்பிலான கட்டணம் இல்லா சேவைகள் வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?