பள்ளிகள் இடையிலான வாலிபால்: டான் போஸ்கோ, வேலம்மாள் அரை இறுதிக்கு முன்னேற்றம்

பள்ளிகள் இடையிலான வாலிபால்: டான் போஸ்கோ, வேலம்மாள் அரை இறுதிக்கு முன்னேற்றம்

சென்னை:

சான் அகாடமியின் 7-வது சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.


இதன் 2-வது நாளான நேற்று சிறுவர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டங்களில் பெரம்பூர் டான் போஸ்கோ 25-20, 25-18 என்ற செட் கணக்கில் பிஏகே பழனிசாமி மேல்நிலைப் பள்ளி அணியையும், ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் 33-35, 25-10, 25-10 என்ற செட் கணக்கில் ஒய்எம்சிஏ கொட்டிவாக்கம் அணியையும் வீழ்த்தின.


செயின்ட் பீட்ஸ் 28-18, 26-28, 25-22 என்ற கணக்​கில் ஆலந்​தூர் மான்​போர்ட் அணி​யை​யும், முகப்​பேர் வேலம்​மாள் அணி 25-14, 25-8 என்ற கணக்​கில் அம்​பத்​தூர் சேது பாஸ்​கரா அணி​யை​யும் வீழ்த்தி அரை இறு​திக்கு முன்​னேறின. சிறுமியர் பிரிவு அரை இறு​தி​யில் டி.இ.எல்​.சி.மெக்​டலின் 25-13, 25-13 என்ற செட் கணக்​கில் ஜெசி மோசஸ் அணி​யை​யும், வித்​யோதயா மெட்​ரிக் 25-19, 25-22 என்ற கணக்​கில் சென்னை மேல்​நிலைப் பள்ளி அணி​யை​யும் வீழ்த்தி இறு​திப் போட்​டிக்​கு முன்​னேறின.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%