இது டீசர் மட்டுமே... இனிதான் மெ​யின் பிக்​சர்!” - ‘வாக்கு திருட்டு’ விவகாரத்தில் ராகுல் காந்தி தகவல்

இது டீசர் மட்டுமே... இனிதான் மெ​யின் பிக்​சர்!” - ‘வாக்கு திருட்டு’ விவகாரத்தில் ராகுல் காந்தி தகவல்

புதுடெல்லி:

மக்​களவை தேர்​தலின்போது வாக்​காளர் பட்​டியலில் முறை​கேடு செய்​யப்​பட்​டு, வாக்​குத் திருட்டு நடை​பெற்​ற​தாக குற்​றம்​சாட்​டி​யுள்ள ராகுல் காந்​தி, கடந்த வாரம் அதற்​கான ஆதா​ரங்​களை வெளி​யிட்​டார். ஆனால், இந்த குற்​றச்​சாட்​டு​களை தலைமைத் தேர்​தல் ஆணை​யம் மறுத்துள்ளது.


இதைத் தொடர்ந்​து, தேர்​தல் ஆணை​யத்​துக்கு கண்​டனம் தெரிவிக்​கும் வகை​யில், டெல்லி நாடாளு​மன்​றத்​தில் இருந்து தேர்​தல் ஆணைய அலு​வல​கம் வரை எதிர்க்​கட்​சிகளை சேர்ந்த 300-க்​கும் அதி​க​மான எம்​.பி.க்​கள் பேரணி​யாகச் சென்​றனர். அப்​போது ராகுல் காந்தி உள்​ளிட்ட எதிர்க்​கட்​சித் தலை​வர்​களை டெல்லி போலீ​ஸார், கைது செய்​து, பின்​னர் விடு​வித்​தனர்.


இந்​நிலை​யில், நேற்று நாடாளு​மன்ற வளாகத்​தில் ராகுல் காந்​தி செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நாங்​கள் அரசி​யலமைப்பை பாது​காக்​கிறோம். ஒரு​வருக்கு ஒரு வாக்கு என்​பது நமது அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் அடிப்​படை​யாகும். இதனை அமல்​படுத்​து​வது இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் கடமை. ஆனால், அவர்​கள் தங்​களின் கடமை​யைச் செய்ய தவறி​விட்​டனர்.


பெங்​களூரு, மட்​டுமல்ல நாடு முழு​வதும் பல்​வேறு பகு​தி​களில் இது​போன்று முறை​கேடு நடை​பெற்​றுள்​ளது. தேர்​தல் ஆணை​யத்​துக்​கும் இது தெரியும். முன்பு ஆதா​ரங்​கள் இல்​லாமல் இருந்​தது. தற்​போது எங்​களிடம் ஆதா​ரம் இருக்​கிறது. நாங்​கள் அரசி​யலமைப்பை பாது​காக்​கிறோம். தொடர்ந்து செய்​வோம். நிறுத்த மாட்டோம். தற்​போது டீசர் மட்​டும்​தான் வெளி​யாகி​யுள்​ளது. இந்த விவ​காரத்​தில் மேலும் சில படங்​கள் (மெ​யின் பிக்​சர்) இன்​னும் உள்​ளன. அவை விரை​வில் வெளிவரும்.


இந்த போராட்​டம் என்​பது அரசி​யல் கிடை​யாது. அரசி​யலமைப்பை காப்​பாற்​றவே இந்​தப் போராட்​டம். 'ஒரு நபர், ஒரு வாக்​கு' என்பதை நிலைநாட்டவே இந்த போராட்​டம். இவ்​வாறு ராகுல்​ காந்​தி தெரிவித்​தார்​.




இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பிரியங்கா காந்தி, ஆர்.சுதா உள்ளிட்ட சில எம்.பி.க்கள் மின்டா தேவி மற்றும் அவரது படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் அணிந்திருந்தனர். டி-ஷர்ட் பின்புறத்தில் ‘124 நாட் அவுட்’ என்று எழுதப்பட்டிருந்தது. பிஹார் வாக்காளர் பட்டியலில் 124 வயது மின்டா தேவியின் பெயர் முதல்முறை வாக்காளராக இடம்பெற்றுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.


இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில், “இதுபோல் எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. இவை தொடர்ந்து வெளிவரும்” என்றார். பிரியங்கா காந்தி கூறுகையில், “பிஹார் வாக்காளர் பட்டியலில் போலியாக இடம்பெற்றுள்ள பெயர்கள், முகவரிகள் என நிறைய உள்ளன” என்றார்.


இந்நிலையில் இவர்களின் கூற்றை தனியார் தொலைகாட்சி ஒன்று ஆராய்ந்ததில், சிவான் மாவட்டத்தின் தரவுண்டா சட்டப் பேரவை தொகுதியில் வாக்காளராகப் பதிவுசெய்யப்பட்ட மின்டா தேவிக்கு 124 வயது அல்ல, 35 வயது என கண்டறியப்பட்டது. இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “மின்டா தேவியின் விண்ணப்பப் படிவத்தில் உள்ள பிழை காரணமாக வாக்காளர் பட்டியலில் அவரது வயது மாறியுள்ளது” என்றார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%