சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: அர்ஜுன் எரிகைசி - வின்சென்ட் கீமர் மோதிய ஆட்டம் டிரா

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: அர்ஜுன் எரிகைசி - வின்சென்ட் கீமர் மோதிய ஆட்டம் டிரா

சென்னை:

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 6-வது நாளான நேற்று 6-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவின் முரளி கார்த்திகேயன், அமெரிக்காவின் ரே ராப்சன் மோதிய ஆட்டம் 123-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.


இந்தியாவின் நிஹால் சரின், நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரஸ்டுடன் மோதினார். இதில் ஜோர்டன் வான் பாரஸ்ட் 51-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இந்திய கிராண்ட்மாஸ்டரான வி.பிரணவ், அமெரிக்காவின் அவாண்டர் லியாங்குடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் அவாண்டர் லியாங் 61-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அர்ஜுன் எரிகைசியுடன் மோதினார். இந்த ஆட்டம் 41-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்தியாவின் விதித் குஜராத்தி மோதிய ஆட்டம் 109-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.


சேலஞ்சர்ஸ் பிரிவு 6-வது சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான பா.இனியன், சர்​வ​தேச மாஸ்​ட​ரான ஜி.பி.ஹர்​ஷ்வர்​தனுடன் மோதி​னார். இந்த ஆட்​டம் 111-வது நகர்த்​தலின் போது டிரா​வில் முடிவடைந்​தது.


அதிபன் பாஸ்​கரன், திப்​தாயன் கோஷுடன் மோதி​னார். இதில் அதிபன் பாஸ்​கரன் 34-வது நகர்த்​தலின் போது வெற்றி பெற்​றார். இது அவருக்கு முதல் வெற்​றி​யாக அமைந்​தது. முதல் 5 சுற்​றுகளை​யும் டிரா​வில் முடித்​திருந்த அவர், தற்​போதைய வெற்​றி​யால் முழு​மை​யாக ஒரு புள்​ளியை பெற்​றார். லியோன் லூக் மென்​டோன்​கா, ஆர்​யன் சோப்​ராவை எதிர்​கொண்​டார். இதில் லியோன் லூக் மென்​டோன்கா 37-வது நகர்த்​தலின் போது வெற்றி பெற்​றார்.


அபிமன்யு புராணிக், எம்​.பிரனேஷுடன் பலப்​பரீட்சை நடத்​தி​னார். இதில் 46-வது நகர்த்​தலின் போது எம்​.பிரனேஷ் வெற்றி பெற்றார். மற்​றொரு ஆட்​டத்​தில் ஆர்​.வைஷாலி, ஹரிகா துரோணவல்லி மோதி​னார்​கள். இதில் ஹரிகா துரோணவல்லி 80-வது நகர்த்​தலின் போது வெற்றி பெற்​றார்.


6 சுற்​றுகளின் முடி​வில் மாஸ்​டர்ஸ் பிரி​வில் வின்​சென்ட் கீமர் 4.5 புள்ளிகளுடன் முதலிடத்​தில் தொடர்​கிறார். அர்​ஜுன் எரி​கைசி (3.5), அவோண்​டர் லியாங் (3.5), அனிஷ் கிரி (3), முரளி கார்த்​திக்​கேயன் (3), விதித் குஜ​ராத்தி (3), ஜோர்​டான் வான் பாரஸ்ட் (3), ரே ராப்​சன் (2), நிஹால் சரின் (2), வி.பிரணவ் (2) ஆகியோர் முறையே 2 முதல் 10-வது இடங்​களில் உள்​ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%