பறிமுதல் செய்யப்படும் குடிநீர் பாட்டில்கள் மாற்று ஏற்பாட்டை எதிர்நோக்கும் சுற்றுலாப் பயணிகள்
உதகை, நவ.9- நீலகிரி மாவட்ட எல்லையிலுள்ள சோதனைச்சாவடிகளில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படும் நிலை யில், நகருக்குள் குடிநீருக்காக அவதிக்குள் ளாகும் சுற்றுலாப் பயணிகள், மாற்று ஏற் பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள னர். நீலகிரி மாவட்டத்தின் இயற்கை மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்றம் ஒருமுறை பயன்ப டுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாலித்தின் பைகள், தட்டுகள், டம்ளர்கள் மற்றும் 1 லிட்டர், 2 லிட் டர் வாட்டர் பாட்டில்களை பயன்படுத்த முற்றி லுமாக தடை விதித்துள்ளது. இதனால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்க ளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி அவ்வப்போது அபராதங்கள் விதித்து நடவ டிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதே போல், மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச்சாவடிகளில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங் களில் இருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணி களின் வாகனங்களில் கொண்டு வரப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து, அபராதம் விதித்து வருகின்றனர். மேலும், சட்டவிரோதமாக கொண்டு செல்லப் பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்டத்திற்கு வரக்கூடிய சுற்று லாப் பயணிகளை மாநில எல்லைப் பகுதிக ளில் கடுமையாக எச்சரித்து அனுமதித்து வரு கின்றனர். இந்நிலையில், மேல்கூடலூர் சோதனைச் சாவடியில் சுற்றுலாப் பயணிகள் குடிக்க பயன்படுத்த கொண்டு வரக்கூடிய பிளாஸ் டிக் பாட்டில்களை பறிமுதல் செய்தும் அப ராதங்கள் விதித்து வருவாய் துறையினர் மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர். மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் இருந்து உதகைக்கு 50 கிலோமீட்டர் அடர்ந்த வனப் பகுதியின் நடுவே அமைந்துள்ள மலைப் பாதை வழியாக உதகையை அடைய வேண் டும். செல்லும் வழியில் கிட்டத்தட்ட 20 முதல் 30 கிலோமீட்டர் தொலைவில் எந்த கடைக ளும், வணிக நிறுவனங்களும் இல்லாததால் மலைப்பாதையில் வனப்பகுதியின் வழியாக உதகை நோக்கி வரக்கூடிய சுற்றுலாப் பயணி கள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி பல்வேறு சிர மங்களுக்குள்ளாகி வருகின்றனர். இத னால் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழக் கூடிய உதகைக்கு ஒருமுறை வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் அடுத்த முறை வருவது மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தி யுள்ளது. குடிநீர் பாட்டில்களை பறிமுதல் செய்யும் வருவாய் துறையினர் அதற்கு மாற்றாக எவ் வித நடவடிக்கையும் எடுக்காமல், பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி அபராதம் விதிப் பதால் உதகைக்கு செல்வது மிகப்பெரிய அச் சுறுத்தலாகவே உள்ளது என சுற்றுலாப் பய ணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதனால் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யும் இடங்களில், மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.