மஞ்சள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

மஞ்சள் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி



ஈரோடு, நவ.9- தேவை அதிகரிப்பு காரணமாக ஈரோட் டில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஈரோடு மஞ்சள் சந்தையில் கடந்த வாரத் தில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் ரூ.9,500 முதல் ரூ.13,900 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.7,900 முதல் ரூ.12,700 வரையும் விற்பனையானது. இந்த வாரத்தில் ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் ரூ.8,369 முதல் ரூ.15,119 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.8,099 முதல் ரூ.13,888 வரையும் விற்பனையாது. இந்த வாரத்தில் குவிண்டாலுக்கு ரூ.1000 முதல் ரூ.1,200 வரை விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்கத்தினர் கூறுகை யில், புதிய மஞ்சள் அறுவடைக்கு பின் கடந்த 4 மாதங்களாக மஞ்சளை வியாபாரிகள் வாங்கி இருப்பு வைப்பது குறைந்துள்ளது. தற்போது இருப்பு இல்லை என்பதால் அதிக மாக வாங்குகின்றனர். தேவை அதிகரிப்பு, ஏற்றுமதி 10 முதல் 15 சதவீதம் வரை உயர்வு, மகாராஷ்டிரா, நிஜாமாபாத், ஆந்திரா போன்ற இடங்களில் மழையால் மஞ்சள் மக சூல் பாதிப்பு போன்ற காரணங்களால் ஈரோடு சந்தையில் தற்போது விற்பனை அதிகமாகி, விலை உயர்ந்துள்ளது. நடப்பாண்டு தேசிய அளவில் மஞ்சள் சாகுபடி அதிகரித்துள்ளது. ஆனால் மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே அதி கமாக பெய்து, வடகிழக்கு பருவமழையும் தொடர்ந்துள்ளதால் தற்போது பயிரிடப் பட்டுள்ள மஞ்சளும் அதிகம் பாதிக்கும் அச் சம் உள்ளது. அவ்வாறு பாதித்தால் வரத்து, தரம் குறையலாம். எனவே, வியாபாரிகள் தர மான மஞ்சளை வாங்கி இருப்பு வைப்பதால் விலை உயர்கிறது. மழைக்குப் பின் பாதிப்பு எவ்வாறு உள்ளது என்பதற்கு ஏற்ப வரும் நாள்களில் மஞ்சள் விலை மாறுபடும், என்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%