பெரம்பலூர், நவ.9- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக, 2025 ஆம் ஆண்டுக்குரிய இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பதவிகளுக்கான பொதுத்தேர்வு ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த தேர்வு மையத்தினை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு காவல் துறை தலைவர் கயல்விழி மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த தேர்வினை 1,592 பேர் எழுத விண்ணப்பத்திருந்தனர். இதில் ஆயிரத்து 59 ஆண்களும், 322 பெண்களும் என மொத்தம் 1,381 பேர் தேர்வெழுதினர். 211 பேர் தேர்வெழுத வரவில்லை. தேர்வு மையத்தில் 120 பேர் கண்காணிப்பு பணியிலும், 180 காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தேர்வர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?