நீதிபதி மீது நடவடிக்கை: திருமாவளவன் வலியுறுத்தல்

நீதிபதி மீது நடவடிக்கை: திருமாவளவன் வலியுறுத்தல்

 திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படாமல் தடுத்து அமைதியை நிலைநாட்டிய தமிழ்நாடு அரசுக்கும் மத நல்லிணக்கத்தைக் காப்பாற்றிய மக்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார் . வழக்கமான இடத்தை விட்டு வேறிடத்தில் தீபம் ஏற்ற முயற்சித்த பயங்கரவாதிகளை யுஏபிஏ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரியிருக்கும் அவர், வெளியூரிலிருந்து வந்து கலவரத்தில் ஈடுபட்ட வர்களுக்கு ஆதரவாக மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும், இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டினார். சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க முயற்சித்த நீதிபதி மீது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாடாளு மன்றத்தில் இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களைக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%