நாமக்கல்லில் 96 தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.50 ஆயிரம்- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி

நாமக்கல்லில் 96 தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.50 ஆயிரம்- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி

நாமக்கல், ஆக. 10–


நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியத் தலைவர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி, கலெக்டர் துர்காமூர்த்தி தலைமையில், மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம், மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலையில், தூய்மைப் பணியாளர் நலவாரியம் சார்பில் 96 தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.50,000 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி தெரிவித்ததாவது,


முதலமைச்சர் தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார்கள். தூய்மைப் பணியாளர்கள் கையுறை மற்றும் முக கவசம் அணிந்து தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதி 1974-ம் ஆண்டு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தினை உருவாக்கினார்கள். மேலும் இந்த வாரியத்திற்கு 2007-ம் ஆண்டு தூய்மைப் பணியாளர் நல வாரியம் என்ற பெயரை வழங்கினார்கள். அந்த வகையில் முதலமைச்சர் இந்த வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி நிதியினை ஒதுக்கியுள்ளார்கள். பகுதி நேர தூய்மை பணியாளர்களை முழுநேர பணியாளர்களாக அங்கீகாரம் வழங்கவும், அவர்களின் ஊதியத்தினை உயர்த்தி வழங்கவும் முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


தூய்மைப் பணியாளர்கள் தங்களது குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும். முதலமைச்சர் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் வெளிநாடுகளுக்கு சென்று பயிலுவதற்கு ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்கள் என திப்பம்பட்டி ஆறுச்சாமி தெரிவித்தார்.


இந்தநிகழ்ச்சியில், துணை மேயர் பூபதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) பா.ராமசாமி, தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நலவாரிய தலைவர் செ.கனிமொழி பத்மநாபன், உறுப்பினர் செ.ரமேஷ், மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர் வே.சாந்தி, நகராட்சி கமிஷனர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%