துறையூர் அருகே புளியஞ்சோலையில் கரடி உலா வருவதாக வைரலான வீடியோவால் பரபரப்பு
Aug 12 2025
16

துறையூர் ஆக 11
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த சுற்றுலாத்தலமான புளியஞ்சோலை பகுதியில் கரடி உலா வருவது போல் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதன் உண்மை தன்மை அறியும் வரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கோ சுற்றிப் பார்ப்பதற்கோ அனுமதி இல்லை என நாமக்கல் மாவட்ட வனச்சரக அதிகாரி மாதவி யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா தளமான புளியஞ்சோலைகள் துறையூர் மற்றும் இன்றி திருச்சி நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் புளியஞ்சோலை ஆற்றில் குளிப்பதற்கும் சுற்றி பார்ப்பதற்கும் வருகை தருவார்கள் என்பதால் பயணிகளின் பாதுகாப்பை கருதி புளியஞ்சோலை ஆற்றில் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல அனுமதி இல்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வனவிலங்குக்கான கரடி சுற்றிவரும் பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அப்பகுதியில் கூண்டு அமைத்து கரடி பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கரடி உலா வரும் பவர் ஹவுஸ் எனப்படும் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் அப்பகுதி கண்காணிப்பில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் புளியஞ்சோலையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆடி-18 அன்று புளியஞ்சோலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் அங்குள்ள ஜீவசமாதி மற்றும் மாசி பெரியண்ணசாமி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது இந்நிலையில் தற்போது கரடிஉலா வரும் செய்தியால் ஆடி 28 (13-.08-.2025)அன்று கோவில்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்கள் வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்குள் வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடித்து நடவடிக்கை எடுக்குமாறு பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.சுற்றுலாத்தலமான புளியஞ்சோலையில் கரடி உலா வரும் வீடியோவால் பொதுமக்களிடையே அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?